கம்பராமாயணம் 2050 · அயோத்தியா 6.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரி இருள் பகையை ஓட்டி - பரந்துள்ள இருள் கூட்டம் போன்ற பகையை ஓடச்செய்து; திசைகளை வென்று - திக்குகளை யெல்லாம் தன்னுடையதாக வெற்றி கொண்டு; மேல் நின்று - மேலான இடத்தில் இருந்து; ஒரு தனித் திகிரி உந்தி - ஒப்பற்ற ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி; உயர் புகழ் நிறுவி - தன்னுடைய சிறந்த புகழை நிலைநாட்டி; நாளும் - நாள்தோறும்; இருநிலத்து எவர்க்கும் - இவ் உலகில் உள்ள எல்லார்க்கும்; உள்ளத்து இருந்து - மனத்தின்கண் இருந்து; அருள் புரிந்து - அருளைச் செய்து; வீந்த - இறந்து போன; செருவலி வீரன் என்ன - போர்வலிமை உடைய வீரனாகிய தசரத சக்கரவர்த்தி போல; செங்கதிர்ச் செல்வன் - சூரியன்; சென்றான் - மறைந்தான்.
இருளை ஓட்டி, திசையெல்லாம் ஒளிபரவ, ஆகாயத்தில் இருந்து, ஒற்றைச் சக்கரத் தேரைச் செலுத்தி, புகழை நிறுத்தி, மக்கள் எல்லார் உள்ளத்தேயும் இருந்து நலம் செய்து மறைதல் சூரியனுக்கும் உரியதாதலைப் பொருத்திக் காண்க. சூரிய குலத்தரசனாகிய தசரதனைச் சூரியனோடு உவமித்ததாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the hero mighty in battle who drove off his foes, spreading darkness, conquered every direction, stood supreme,
- drove his single, peerless wheel of command, established his high fame, and every day
- dwelt in the hearts of all on the wide earth and showed them grace, and then died,
- the lord of red rays went down.
What the poem says
The sun sets, and the poet compares it to the dead king Tacarataṉ, of the Solar dynasty. Each phrase fits both. The king drove away enemies, conquered in every direction, ruled from on high with a single wheel of sovereignty, won great fame, lived in his people's hearts and blessed them, and then passed away.
The sun likewise chases off darkness, fills all directions with light, rides high in the sky on its one-wheeled chariot, and does good to every creature before it disappears.