கம்பராமாயணம் 208 · பால 5.40

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓசனை பல கடந்து - (மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற அப்பெண்கள்) பல ஓசனை கடந்து சென்று; ஏசு அறுதவன் உறை இடம் - குற்றமற்ற தவ முனிவன் வாழும் இடம் இதுவாகுமென; இனி ஓர் ஓசனை என்றுழி - இனி ஒரு யோசனை தூரம் தானிருக்கிறது என்று கூறப்படும் இடத்தில்; பன்ன சாலை செய்து - தழை, குழை, கொம்புகளால் உறைவிடமமைத்து; பாசு இழை மடந்தையர் - பசிய அணிகலன்களை அணிந்த அப்பெண்கள்; ஆசு அறும் அருந்தவத்தவரின் - குற்றமறுத்த அரிய தவத்தினர் போல; வைகினார் - அங்கு வாழத் தொடங்கினர்.

ஓசனை: யோசனை. ஏசு அறு: ஏசறு: பிறரால் பழிப்பற்ற. “பழிப்பதொழித்து” என்ற குறள் ஒப்பிடத்தக்கது. உழி: இடம். பசுமை+இழை: பாசிழை: பசுமையான அணிகலன்கள். பன்னசாலை: இலைக்குடில். அரசனைத் தொழுது, தேரேறிச் சென்ற அம்மகளிர் பல யோசனை தூரம் கடந்து - முனிவனிருக்குமிடத்திற்கு ஒரு யோசனை தூரம் தானுள்ள தென்னுமிடத்தில் உறைவிடம் அமைத்து - தவ முனிவர்களைப் போல வாழலானார் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having crossed many leagues, at a place where it was said, 'From here it is one league more
  2. to where the blameless ascetic lives,'
  3. the women with fresh jewels built a hut of leaves
  4. and dwelt there like ascetics of faultless, hard penance.

What the poem says

The courtesans travel until they are a single league (yōjana) from the sage's hermitage. There they build a hut of leaves and branches.

They settle down disguised as forest ascetics, a deception that will let them approach him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōcaṉai pala kaṭantu, iṉi ōr ōcaṉai
ēcu aṟu tavaṉ uṟai iṭam itu, eṉṟuḻi,
pāciḻai maṭantaiyar, paṉṉacālai ceytu,
ācu aṟum arun tavattavariṉ, vaikiṉār.