கம்பராமாயணம் 209 · பால 5.41

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர் கலை வலாளனில்
பொருந்தினர் ; பொருந்துபு, விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர் என, இனைய செய்தனன்."

பொருள் · Meaning in Tamil

அருந்தவன் தந்தையை அற்றம் நோக்கியே - அரிய தவத்தை உடைய கலைக் கோட்டு முனிவனது தந்தையாகிய விபாண்டகர் இல்லாத சமயம் பார்த்து; கரும் தடம் கண்ணியர் கலைவலாளன் இல்பொருந்தினர் - கரிய, அகன்ற கண்களை உடைய அப்பெண்கள் எல்லாக்கலைகளிலும் வல்லவராகிய அம்முனிவரின் குடிலை அடைந்தனர்; பொருந்துபு - அங்ஙனம் அடைந்த போது; விலங்கு எனா புரிந்து இருந்தவர் - மனிதர்களை விலங்கினங்களோடு ஒப்ப மதித்து இருக்குமவன், முனிவர்களே; இவர் என இனைய செய்தனன் - இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.

அற்றம்: சமயம் (மறைவு). கண்களால் மயக்கி வசப்படுத்தும் தன்மையால் கருந்தடங் கண்ணியர் என்கிறார். கலை வலாளன்: எல்லாக் கலைகளிலும் வல்லவன் (கலைக் கோட்டு முனிவன்). பொருந்துபு: பொருந்த (செய்பு என்ற வாய்பாட்டு வினையெச்சம்). எனா: என்று (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்). தந்தை இல்லாத தருணத்தை எதிர்பார்த்திருந்த அம்முனிவனது உறையுளை அடைந்த அப்பெண்கள், தன்னைப் போன்ற தவமுனிவர்கள் இவர்கள் எனக் கருதி உபசரிக்கத் தொடங்கினான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Watching for the time when the great ascetic's father was away,
  2. the women with large dark eyes went to the dwelling of the master of the arts;
  3. and when they had come, he, who held men to be no more than beasts, thinking
  4. 'These are ascetics,' did the following.

What the poem says

The women wait until the young sage's father, Vipāṇṭakaṉ, is away. Then they visit the hermitage.

The young sage has never seen a woman and holds all ordinary people in contempt. He takes them for fellow ascetics and welcomes them, as the next verse describes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"arun tavaṉ tantaiyai aṟṟam nōkkiyē
karun taṭaṅ kaṇṇiyar kalai valāḷaṉ il
poruntiṉar; poruntupu, vilaṅku eṉāp purintu
iruntavar ivar eṉa, iṉaiya ceytaṉar."