கம்பராமாயணம் 210 · பால 5.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருக்கியம் முதலினோடு - அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு; ஆசனம் கொடுத்து - அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து; இருக்க என இருந்தபின் - அமர்வீராக என முனிவன் கூற அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர்; இனிய கூறலும் - இனிய உரையால் முகமன் கூறி வரவேற்க; முருக்கு இதழ் மடந்தையர் - முருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள்; முனிவனைத் தொழா - அந்த முனிவனைத் தொழுது (பின்பு); பொருக்கென எழுந்து போய் - விரைந்தெழுந்து சென்று; புரையுள் புக்கனர் - தமது பன்ன சாலையை அடைந்தனர்.
அருக்கியம் - கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக, கை கழுவவும், கால் அலம்பவும், வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும். இவைகளை அருக்கியம், பாத்தியம், ஆசமனீயம் என்பர் வடநூலார். அதனை இங்கு, கம்பரும் ‘அருக்கியம்’ என்றார். ஆசனம் - இருக்கை. இனிய கூறல்: முகமன் கூறுதல். முருக்கு: முள் முருங்கைப் பூ. பெண்களின் உதடுகளுக்கு இம் மலரை உவமை கூறுவர். தொழா: தொழுது (செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம்). பொருக்கென: விரைவுக் குறிப்புச் சொல். புரை: வீடு. இங்குப் பன்னசாலையைக் குறிக்கும்.
வந்த மகளிரை முனிவர்கள் எனக் கருதி - அருக்கியம் முதலியன தந்தும் ஆசனமளித்தும் - முகமன் கூறியும் உபசரித்துக் கலைக் கோட்டு முனிவனை அப்பெண்கள் தொழுது விரைந்தெழுந்ததும் உறைவிடம் சென்றனர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Giving them water of welcome and all the rest, and seats,
- he said, 'Be seated'; when they had sat, he spoke sweet words of greeting;
- and the women with lips like the murukku flower bowed to the sage,
- rose up quickly, left, and went back into their hut.
What the poem says
The innocent sage receives the women with every courtesy due to holy guests. He offers water for their hands, feet and mouth, gives them seats and speaks kindly to them.
After this first visit the women bow and quickly return to their own hut, careful not to arouse suspicion.