கம்பராமாயணம் 211 · பால 5.43

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை வாழை மாத்
தரும் தரும் கனியொடு தாழை இன் பலம்
'அருந்தவ! அருந்து' என அருளினார், அரோ."

பொருள் · Meaning in Tamil

திருந்து இழையவர் - திருந்திய அணிகலன்களை அணிந்திருப்பவர்களாகிய அப்பெண்கள்; சிலதினங்கள் தீர்ந்துழி - சில நாட்கள் சென்ற பிறகு; மருந்தினும் இனியன - அமுதத்தை விட இனிமையாகிய; வருக்கை வாழை மா - பலா, வாழை, மா (என்னும் மூவகை மரங்களும்), தரும்கனி பலவொடு - தருகின்ற பழங்கள் பலவுடனே; தாழையின் கனி - தேங்காய்களையும் (கொணர்ந்து); அருந்தவ அருந்தென - அரிய தவமுனிவரே! இவற்றை அருந்துவீராக என வேண்ட; அருந்தினான் - அம்முனிவனும் அவற்றை உண்டான்.

அரோ: அசை. இழை: மணிகள் பதித்துச் செய்யப்பட்டமையால் இப்பெயர் பெற்றதென்பர். திருந்திழை: இப்போது அம்மகளிர் திருத்தமான நகைகள் அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பு. தீர்ந்துழி என்பதில் ‘உழி’ காலப் பொருளை உணர்த்தும். மருந்து: அமுதம். வருக்கை: பலா. தாழை: தென்னை. தாழையின் கனி: தேங்காய். “தெங்கின் பழம் வீழ” என்பது சிந்தாமணி. தமது உறைவிடம் சென்ற மகளிர் சில நாட்கள் கழித்து மீண்டும் முனிவனிடம் வந்து, பலவகைப் பழங்களைத் தந்து உண்ண வேண்டினர். அம்முனிவனும் அவற்றை உண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When some days had passed, the women with fine jewels
  2. brought jackfruit, plantain and mango, fruits sweeter than nectar,
  3. many of them, with the sweet fruit of the coconut palm,
  4. saying, 'Great ascetic, eat!' — and he ate.

What the poem says

A few days later the women come back, this time in fine jewellery, bringing jackfruit, bananas, mangoes and coconuts sweeter than nectar.

They invite the sage to eat, and he does. Slowly they are drawing him into their world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"tiruntu iḻaiyavar cila tiṉaṅkaḷ tīrntuḻi
maruntiṉum iṉiyaṉa varukkai vāḻai māt
taruṅ kaṉi palavoṭu tāḻai iṉ kaṉi
'aruntava! aruntu' eṉa aruntiṉāṉarō."