கம்பராமாயணம் 212 · பால 5.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன்னன பல்பகல் இறந்தபின் - இவ்வாறு பல நாட்கள் சென்றபின்; திருநல் நுதல் மடந்தையர் - அழகிய நல்ல நெற்றியை உடைய அப்பெண்கள்; நவை இல் மாதவன் தன்னை - குற்றமில்லாத சிறந்த தவத்தை உடைய அக்கலைக் கோட்டு முனிவனை; எம்மிடத்தினும் சார்தல் வேண்டும் என்று - எங்கள் இருப்பிடத்துக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று கூறி; அன்னவர் தொழுதலும் - அம்மகளிர் வணங்கிவேண்டிட; அவரொடும் ஏகினான் - அம்முனிவனும் அவர்களுடன் சென்றான்.
இன்னன: இவ்விதமாக. இறுத்தல்: கழிதல். பகல்: நாள். திரு: அழகு. மடந்தையர்: இளம்பெண்கள் (மடம்: இளமை). நவை: குற்றம். அப்பெண்கள் விபாண்டகர் இல்லாத சமயம் பார்த்து, பல நாட்கள் வந்து பழகியவர்கள், ஒருநாள் எம் இருப்பிடத்துக்கும் வரவேண்டும் என்று தொழுது வேண்ட, கலைக் கோட்டு முனிவன் அவர்களுடன் செல்லலானான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- After many days had passed in this way, the women
- with lovely, fine brows bowed and said to the flawless great ascetic,
- 'You must come to our dwelling too,'
- and he went along with them.
What the poem says
Over many days of visits the women win the sage's trust. Then they bow and invite him to visit their dwelling in turn.
All unknowing, the deer-horned sage agrees and goes with them.