கம்பராமாயணம் 213 · பால 5.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விம்முறும் உவகையர் - விளங்கிப் பெருகும் மகிழ்ச்சி உடையவராயும்; வியந்த நெஞ்சினர் - பெருமிதங் கொண்ட மனத்தினராயும் உள்ள; மருள் தையலார்கள் - மருண்ட கண்களை உடைய அம்மாதர்கள்; செம்மையின் முனிவரன் தொடர - சிறந்த அம்முனிவன் அவர்களைத் தொடர்ந்து வர; அகலும் நீள் நெறி - அகன்று நீண்ட அந்த வழியிலே; அம்ம ஈது ஈது என - எங்கள் இருப்பிடம் இதுதான் இதுதான் என்று; தம்மனம் எனச் சென்றனர் - வேகமாகச் செல்லும் தமது மனம் போலச் சென்றார்கள்.
விம்முதல்: விளங்கிப் பெருகுதல். அம்ம: வியப்புக்குறிப்பு. வியத்தல்: எவராலும் இயலாத செயலைச் செய்தோம் என்னும் பெருமிதம் அடைதல். மனம் என: மனத்தின் வேகத்தைப் போல. மருள்: கண் இயல்பு. தையல்: அழகு. நீள் நெறி: நீண்ட வழி. எமது இருப்பிடம் “இதுதான் இதுதான்” என்று சொல்லிக் கொண்டே நீண்ட வழியிலே அம்முனிவரை அழைத்துக் கொண்டு தமது மனம் போலவே வேகமாகச் சென்றனர் அம்மகளிர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With swelling joy and proud hearts,
- saying, 'Look! It's here, it's here!' along the long, broad road,
- with the excellent sage following behind, they went,
- those bewitching women, as fast as their own thoughts.
What the poem says
Triumphant at having achieved what no one else could, the women lead the sage along the road. They keep saying 'It's just here!' to coax him further and further.
They move as fast as thought, and he follows them out of the forest.