கம்பராமாயணம் 214 · பால 5.46

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"வளம் நகர் முனிவரன் வரும் முன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்
சளசள என மழைத் தாரை கான்றன,
குளனொடும் நதிகள் தம் குறைகள் தீரவே."

பொருள் · Meaning in Tamil

முனிவரன் வளநகர் வருமுன் - கலைக் கோட்டு முனிவன் அந்த வளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே; வான்முகில் வானவன் களன் அமர்கடு எனக் கருகி - பெரு மேகங்கள், சிவபிரானுடைய கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு; குளனொடு நதிகள்தம் குறைகள் தீர - குளங்களும், ஆறுகளும் குறை தீரும் படியாக; மழைத்தாரை சளசள எனக் கான்றன - மழைத் தாரைகளைச் சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன.

வருமுன்: வருமளவில் (அல்லது வருவதற்கு முன்னமே) முன்: காலம். வானவன்: பெரியோன் (சிவபிரான்). களன்: கழுத்து. கடு: நஞ்சு. குறைகள் தீர: நீரில்லாமையாகிய குறை நீங்க. குளன்: (ம-ன போலி). சளசள: ஒலிக் குறிப்பு. கான்றன: சொரிந்தன. முனிவன் நகருக்கு வருவதற்கு முன்னே மழை பொழிந்தது என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even before the great sage reached the rich city, the vast clouds
  2. turned black like the poison lodged in the throat of the Great God,
  3. and with a splashing roar poured down streams of rain,
  4. so that the tanks and rivers were relieved of their want.

What the poem says

The deer-horned sage's power is so great that the rains begin before he even reaches Urōmapataṉ's city. The clouds turn as black as the poison in Śiva's throat and pour down noisily.

The empty tanks and dry rivers fill up at last.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"vaḷanakar muṉivaraṉ varumuṉ, vāṉavaṉ
kaḷaṉ amar kaṭu eṉak karuki, vāṉ mukil
caḷacaḷa eṉa maḻait tārai kāṉṟaṉa,
kuḷaṉoṭu natikaḷ tam kuṟaikaḷ tīravē."