கம்பராமாயணம் 215 · பால 5.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பெரும்புனல் - பெய்த மழையால் பெருகிய வெள்ள நீரால்; நதிகளும் குளனும் பெட்பு உற - நீரோடும் ஆறுகளும், நீர் நிறைந்த குளங்களும் மக்கள் விரும்புமாறும்; கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட - கரும்பும், செந்நெற் பயிரும் அழகு கொண்டு செழித்தோங்கவும்; இரும்புயல் ககனமீது எழுந்து - பெரு மேகங்கள் வானவீதியில் எழுந்து நின்று; அரும்புனல் இடைவிடாது சொரிந்த போது - அரிய மழைப் பெருக்கினை இடைவிடாமல் சொரிந்த வேளையில்; அரசு உணர்ந்தனன் - அந்த நாட்டு மன்னனான உரோமபதன் முனிவரது வருகையைத் தெரிந்து கொண்டான்.
குளம்: செயற்கை நீர்நிலை. ஓடும் நீருக்கும் தேங்கும் நீருக்கும் மழையே காரணம் என்பதால், ‘நதிகளும் குளனும் பெட்புற’ என்றார். பெட்பு: விருப்பம். கரும்பும் நெல்லும் உயர் பயிர்களாதலின் சிறப்பித்துக் கூறினார். இனம் கொளற் குறித்தாதலால் ஏனைய பயிர் வகைகளையும் கூறலாம். ககனம்: வானம். புயல்: மேகம். கவின் கொண்டோங்கிட: அழகு பெற்றுத் திகழ. “மழைவர மகிழ்ந்து தழைதரு பயிர்” என்றது ஒப்பு நோக்கத் தக்கது. அரும்புனல்: நெடுங்காலம் மழையின்மையால் அந்நாட்டில் நீர் அரிதாயிற்று என்பதைக் குறித்தது எனலாம்.
மழை பொழிய - அதனால் மன்னன் முனிவனது வருகையைத் தெரிந்து கொண்டான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the rivers in flood and the tanks became a delight,
- and sugar cane and red paddy rose up in their beauty,
- and great clouds massed in the sky without a break
- and poured down precious water, the king understood.
What the poem says
The rain pours down without a break. Rivers and tanks fill and the sugar cane and rice spring up green.
The water is called precious because it has been scarce for so long. King Urōmapataṉ understands that the rain can mean only one thing: the sage has arrived.