கம்பராமாயணம் 2173 · அயோத்தியா 8.52

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் ,
படரும் நல் அறம் பாலித்து , இரவியில்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் , என்பது என் ?
இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“அடரும் செல்வம் அளித்தவன் - நெருங்கிய அரசச் செல்வத்தை எனக்கு அளித்தவனாகிய தயரதனது; ஆணையால் - கட்டளையால்; படரும் நல் அறம் பாலித்து - மேலும் மேலும் பரவிச் சென்று பிறவிதோறும் விளைவதாகிய நல்ல தருமத்தைப் பாதுகாத்து (வனம்புகுத்து); இரவியின் சுடரும் - சூரியனைப் போல ஒளிவீசி விளங்கும்; மெய்ப் புகழ் - உண்மையான புகழை; சூடினென் என்பது என்? - நான் மேற்கொண்டேன் என்பதனால் யாது பயன்?; உனக்கு-; நெடுநாள் இடர் இழைத்தேன் - பல நாள் துன்பத்தைச் செய்தேன்; என்றான் - என்று மனம் வருந்திக் கூறினான்.

'தயரதனது சத்தியவாக்கைக் காப்பாற்ற வனம் புகுந்து புகழ் சூடினேன் ஆயினும், ஒரு பாவமும் அறியாத தம்பியான உனக்கு வனத்தில் என்னோடு அலைவதாகிய துன்பத்தை நெடுநாளாக இழைத்துள்ளேனே' என்று இராமன் இரங்கியதாகக் கொள்க. பிறருக்குத் துன்பம் செய்து தத்தம் புகழ் உண்டாக நடப்பது அறநெறி ஆகுமா என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'By the command of him who gave me abounding wealth
  2. I have kept the good dharma that spreads ever wider, and put on true fame
  3. that blazes like the sun: but what of it?
  4. I have brought suffering on you for long days,' he said.

What the poem says

Irāmaṉ blames himself. By obeying his father he has kept dharma and won glory as bright as the sun.

But what is that worth, he asks, when it has cost his innocent brother long years of hardship in the forest? Can it be right to win fame at the price of another's suffering?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṭarum celvam aḷittavaṉ āṇaiyāl,
paṭarum nal aṟam pālittu, iraviyiṉ
cuṭarum meyp pukaḻ cūṭiṉeṉ, eṉpatu eṉ?
iṭar uṉakku iḻaittēṉ neṭu nāḷ ' eṉṟāṉ.