கம்பராமாயணம் 2172 · அயோத்தியா 8.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று சிந்தித்து - என்று இவ்வாறு நினைத்து; இளையவற் பார்த்து - இலக்குவனைப் பார்த்து; “இரு குன்று போலக் குவவிய தோளினாய்! - இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே; நீ இது போல் என்று கற்றனை? - நீ இவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது கற்றுக் கொண்டாய்? ' என்றான் - என்று கேட்டவனாய்; துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான் - நெருங்கிய தாமரை போலும் கண்கள் நீர் சிந்தப் பெறுகின்றவனாக ஆனான்.
இருவரும் ஒன்றாக வசிட்டர் பால் பயிலுதலின் இக்குடிசை அமைக்கும் கலையை என்று கற்றாய்? என்று இலக்குவனைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கூறினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking so, he looked at his younger brother: 'O you whose shoulders
- are massed like a pair of hills!
- When did you ever learn to do this?' he said,
- and tears ran from his eyes, like close-petalled lotuses.
What the poem says
Irāmaṉ turns to Ilakkuvaṉ with tears in his eyes and asks when he ever learned such a craft.
The two brothers studied side by side under the sage Vaciṭṭaṉ (Vasiṣṭha), and hut-building was not on the curriculum for princes. The question is really an expression of how moved Irāmaṉ is by his brother's devotion.