கம்பராமாயணம் 2171 · அயோத்தியா 8.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மிதிலையர் கோன் மகள் - மிதிலா நகரத்து அரசனாகிய சனகன் மகளாகிய சீதையின்; பூவின் மெல்லிய பாதமும் - பூவைக் காட்டிலும் மிக மெல்லியவாகிய பாதங்களும்; மேவு கானம் போந்தன - கொடிய காட்டில் நடந்து வந்தன; தா இல் எம்பி கை - குற்றம் அற்ற என் தம்பியின் கைகள்; சாலை சமைத்தன - குடிலை அமைத்துத் தந்தன; யாதும் இல்லார்க்கு - எந்தத் துணையும் இல்லாதவர்களுக்கு; இயையாத - வந்து சேராதன; யாவை - எவை (ஒன்றும் இல்லை.)
'பாதமும்' என்ற உம்மை சிறப்பும்மை; மென்மைத் தன்மையை நோக்கியது. பொதுப்பொருள்குறித்த இறுகி அடியமடால் இது வேற்றுப்பொருள் வைப்பணியாம். “ஏ” காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Into the wild forest have come even the feet of the daughter of Mithilai's king,
- softer than flowers;
- the hands of my flawless brother have built a hut;
- what is there that does not befall those who have nothing?'
What the poem says
Irāmaṉ's heart is moved. Cītai's feet, softer than flowers, have had to walk the rough forest, and his blameless brother has had to labour with his own hands to build them shelter.
He ends with a general truth, a figure the commentary calls vēṟṟupporuḷ vaippu, a particular case capped by a maxim: when people lose everything, there is no hardship that may not come to them.