கம்பராமாயணம் 2175 · அயோத்தியா 8.54

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆக , செய் தக்கது இல்லை ; அறத்தில் நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் ;
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா .

பொருள் · Meaning in Tamil

ஆக - அப்படியே இருக்கட்டும், செய்தக்கது இல்லை - (துன்பத்துக்குப் பரிகாரமாகச்) செய்யக்கூடியது எதுவும் இல்லை; அறத்தினின்று ஏகல் என்பது அரிது - தருமத்திலிருந்து விலகிச் செல்வது என்பது நம் போன்றார்க்கு இயலாது; என்று எண்ணினான் - என்று தன் மனத்தில் (இராமன்) கருதினான்; ஓகை கொண்டவன் - (தனக்குத் தொண்டு செய்தலில்) மகிழ்ச்சி கொண்ட இலக்குவனின்; உள் இடர் - மனத்துன்பத்தை; நோக்கினான் - பார்த்து; சோக பங்கம் - இவ் இளையவனது துன்பத்தால் ஏற்பட்ட மனச் சோர்வு; துடைப்பு அரிதால்” - போக்குவது இயலாது; எனா - என்று கருதி.

'ஆக' என்பது உரையசை “ஆல்' அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'So be it; nothing can be done; to turn aside
  2. from dharma is beyond us,' he thought;
  3. and seeing the inner pain of the one who had rejoiced in serving him,
  4. he thought, 'This wound of sorrow is hard to wipe away.'

What the poem says

Irāmaṉ reflects that there is no remedy: neither of them can turn aside from dharma, so the exile must go on.

He also sees that Ilakkuvaṉ, who is glad to serve him, is now distressed by Irāmaṉ's self-reproach, and that this hurt will not easily heal. So he looks for words to comfort him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āka, ceytakkatu illai; aṟattiṉiṉṟu
ēkal eṉpatu aritu eṉṟum eṇṇiṉāṉ;
ōkai koṇṭavaṉ uḷ iṭar nōkkiṉāṉ
cōka paṅkam tuṭaippu aritāl eṉā.