கம்பராமாயணம் 2176 · அயோத்தியா 8.55

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1பின்னும் தம்பியை நோக்கி , பெரியவன் ,
'மன்னும் செல்வத்துக்கு உண்டு வரம்பு ; இதற்கு
என்ன கேடு உண்டு ? இவ் எல்லையில் இன்பம் அத்து ஐ
உன்னு ; மேல் வரும் ஊதியம் அத்து ஓடு ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

பெரியவன் - இராமன்; பின்னும் - மறுபடியும்; தம்பியை நோக்கி - இலக்குவனைப் பார்த்து; “மன்னும் செல்வத்திற்கு - (உலகில்) பெறும் பொருட்செல்வத்திற்கு; வரம்பு உண்டு - இவ் வளவு என்று ஒரு எல்லை உண்டு; இதற்கு - இந்த வனவாசத் தவம் ஆகிய செல்வத்துக்கு; என்ன கேடு உண்டு? - என்ன அழிவு உண்டு; இவ் எல்லை இல் இன்பத்தை மேல் வரும் ஊதியத்தோடு உன்னு” - இந்த அளவுபடாத அழிவுபடாத இன்பவாழ்க்கையை மறுமையில் இத்தவத்தால் பெறும் நற்கதியாகிய இலாபத்தோடு சேர்த்து நினைப்பாயாக, ' என்றான்.

அரசச் செல்வம் அழிவுடையது; அளவு உடையது. ஆனால், தவச் செல்வமோ அழிவற்றது; அளவற்றது; மறுமைக்கும் பயன் தரவல்லது. ஆகவே அரச போகத்தைவிட, வனவாசமே எனக்கு மகிழ்ச்சி தருவது ஆதலின், எனக்குத் துன்பம் விளைந்ததாகவே நான் கருதவில்லை; அதனை நினைத்து நீ துன்புறுவானேன்' என்றானாம் - இது “இடரினுக்கு அங்குரம் முந்தி வந்து முளைத்தது அன்றோ' என்று இலக்குவன் கூறிய து படல பதில் போல் அமைந்து ஆறுதல் தருவதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Again the elder looked at his brother: 'The wealth that lasts on earth
  2. has its limits; but what loss can befall this?
  3. Think of this boundless joy,
  4. together with the gain that is yet to come,' he said.

What the poem says

Irāmaṉ answers his brother's point. A king's wealth, however great, is limited and can be lost. The wealth of a forest life of austerity cannot be lost; its joy is boundless now and will bring further reward in the life to come.

So he does not count the exile a hardship at all, and Ilakkuvaṉ need not grieve over it. This answers Ilakkuvaṉ's remark that the sorrow had fallen on Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉum tampiyai nōkki, periyavaṉ,
'maṉṉum celvattiṟku uṇṭu varampu; itaṟku
eṉṉa kēṭu uṇṭu? iv ellai il iṉpattai
uṉṉu; mēl varum ūtiyattōṭu ' eṉṟāṉ.