கம்பராமாயணம் 2177 · அயோத்தியா 8.56

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேற்றித் தம்பியைத் தேவரும் கை தொழ
நோற்று இருந்தனன் , நோன் சிலையோன் ; இ பால்
ஆற்றல் மாதவன் ஆணையில் போனவர்
கூற்றின் உற்றது கூறல் உற்றாம் அரோ .

பொருள் · Meaning in Tamil

நோன் சிலையோன் - வலிய வில்லை உடைய இராமபிரான் (இவ்வாறு கூறி); தம்பியைத் தேற்றி-; தேவரும் கைதொழ - தேவர்களும் வணங்கும்படியாக; நோற்று இருந்தனன் - தவம் செய்து இருந்தான்; இப்பால் - இனி; ஆற்றல் மாதவன் ஆணையின் போனவர் கூற்றின் - வலிமைமிக்க முனிவராய வசிட்டருடைய கட்டளையை மேற்கொண்டு சென்ற தூதுவர் செய்தியில்; உற்றது - நடந்த செய்தியை; கூறல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம்.

வசிட்டன் அனுப்பப் பரதன்பால் கேகய நாட்டுக்குச் சென்ற தூதுவர் செய்தி இனி வருவதாம் - அரோ” அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having comforted his brother, while even the gods worshipped him with folded hands,
  2. he of the mighty bow lived on in penance. Now,
  3. of the men who went at the bidding of the great and powerful sage,
  4. we begin to tell what befell, as their tidings ran.

What the poem says

Irāmaṉ consoles his brother and settles at Cittirakūṭam into a life of austerity honoured even by the gods. This closes the canto of Cittirakūṭam.

The poet turns the story elsewhere. Earlier the sage Vaciṭṭaṉ had sent messengers to fetch Paratan, who was away at his grandfather's court in Kēkayam, and the narrative now follows them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṟṟit tampiyait tēvarum kaitoḻa
nōṟṟu iruntaṉaṉ, nōṉ cilaiyōṉ; ippāl
āṟṟal mā tavaṉ āṇaiyiṉ pōṉavar
kūṟṟiṉ uṟṟatu kūṟaluṟṟām arō.