கம்பராமாயணம் 2178 · அயோத்தியா 9.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொய் இலார் பொரு இல் தூதுவர் - உண்மை உள்ளவர்களும் தமக்கு வேறு ஒப்பு இல்லாதவர்களும் ஆகிய தூதர்; போயினர் - (அயோத்தியிலிருந்து) சென்றார்கள்; இரவும் நன்பகலும் - இரவிலும் நல்ல பகலிலும்; கடிது - (ஓய்வில்லாமல்) விரைந்து; ஏகினார் - சென்றார்கள்; பரதன் கோயில் உற்றார் - பரதன் தங்கியுள்ள (கேகய நாட்டு) அரண்மனையை அடைந்தார்கள்; “படிகாரிர்! - வாயில் காவலர்களே!; மன்னவற்கு - பரதனுக்கு; எம் வரவு சொல்லுதிர் - (அயோத்தியிலிருந்து வந்திருக்கின்ற) எம் வருகையைத் தெரிவியுங்கள்; ' என்றார் - என்று சொன்னார்கள்.
உள்ளதை உள்ளவாறே சொல்லுதல், ஏவியவர் கூறியதை, அனுப்பிய செய்தியை மாற்றாது உரைத்தல் என்பன தூதர் இயல்பு, ஆதலின், “பொய் இலார்' என்றார். 'படிகாரிர்' என்பது 'பரதீஹாரர்' என்னும் வடசொல் திரிந்து ஆகிய சொல். “காரர்' என்பது “காரிர்' எனவிளியேற்றது. “ஏ' பிரிநிலை; பரதனுக்கே தெரிவிக்க வேண்டும் ஏனையோர்க்கன்று எனலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The peerless envoys, strangers to falsehood, set out;
- by night and by bright day they hurried on;
- they reached Paratan's palace: 'Doorkeepers!
- Announce our coming to the prince himself,' they said.
What the poem says
A new canto begins, the Paḷḷipaṭai Paṭalam, named for the funeral pyre of King Tacarataṉ, whose last rites it describes.
The messengers sent by Vaciṭṭaṉ ride day and night to the palace in Kēkayam where Paratan is staying, and ask the doorkeepers to announce them to Paratan alone. They are "strangers to falsehood", as true messengers should be, carrying their message exactly as given.