கம்பராமாயணம் 2179 · அயோத்தியா 9.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“உந்தை சொல்லோடு தூதர் வந்தனர்” என - உன் தந்தையாகிய தயரதன் சொல்லி அனுப்பிய செய்தியோடு தூதுவர் வந்துள்ளார் என்று (வாயில்காவலர்) கூற; களிக்கின்ற சிந்தையான் - மகிழ்ச்சி அடைகின்ற மனம் உடைய பரதன்; காதல் முந்தி - தந்தையின் சொற்களை அறியும் ஆசை முற்பட்டு; ஈங்குப் போதுக” என - (அவர்கள்) உள்ளே வருக என்று கூற; அவர் - அத்தூதுவர்; புக்கு - உள்நுழைந்து; கைதொழ - கைகளைக் குவித்து வணங்கி நிற்க; “திரு முடியோன் - மாமுடி கவித்த மன்னர் மன்னனாகிய தயரதன்; தீது இலன் கொல்” - யாதொரு தீமையும் இல்லாமல் நலமாக இருக்கின்றானா? என்றான் - என்று (தன் தந்தையாருடைய நலத்தை) விசாரித்தான்.
தந்தையின் உடல் நலனும் அவனால் ஆளப்பெறும் நாட்டின் நலனும் அடங்கத் “தீது இலன்கொல்' என்று விசாரித்தான். பரதனைத் தூதுவர் காணும் போது அயோத்தியில் தயரதன் இறந்துபட்டுள்ளான் ஆதலின், அது அவனை அறியாமல் அவன் வாக்கில் நலமாய் உளனோ' என்று வராமல் “தீது இலன் கொல்' என்று வந்ததாகக் கவிஞன் காட்டுவது குறிப்புமொழி எனப்பெறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he was told, 'Envoys have come with word from your father,'
- he, his heart rejoicing, his love running ahead of him,
- said, 'Let them come in here'; they entered and bowed with joined hands;
- 'Is he free from harm, he who wears the sacred crown?' he asked.
What the poem says
Told that messengers have come with word from his father, Paratan is delighted and calls them in at once. His first question is about the king.
The wording carries a hidden irony. Tacarataṉ is already dead, though Paratan does not know it. Instead of asking "Is he well?", Paratan asks "Is he free from harm?", and the commentary calls this a kuṟippumoḻi, words that unknowingly hint at a truth the speaker does not know.