கம்பராமாயணம் 2180 · அயோத்தியா 9.3

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'' '

பொருள் · Meaning in Tamil

அவர் - அத் தூதுவர்; “வலியன்” என்று கூற - (தயரதன்) நலமாக உள்ளான் என்று கூற; மகிழ்ந்தனன் - (அது கேட்டுப் பரதன்) மகிழ்ச்சி அடைந்தான்; (பின்னர்ப் பரதன்) “எம்பிரானொடும் - எம் தலைவனாகிய இராமபிரானொடும்' இலைகொள் பூண் இளங்கோன் - இலைத்தொழிலாற் சிறப்புற்ற அணிகளை அணிந்த இளைய பெருமாளாகிய இலக்குவன்; உலைவு இல் செல்வத்தனோ” - தளர்ச்சியும் தடுமாற்றமும் இல்லாத செல்வம் உடையவனாய் இருக்கின்றானோ என்று கேட்க; “உண்டு?” என - (அத் தூதுவர் அங்ஙனமே அவர்களும் குறையின்றி) நலமாய் இருக்கின்றார்கள் என்று கூற; தாழ்தடக் கைகள் - தாள் அளவாக நீண்ட கைகளை; தலையில் ஏந்தினன் - (இராமலக்குவர்கள் உள்ள திசை நோக்கிப் பரதன்) தலைமேல் வைத்து வணங்கினான்.

“வலியன்” என்றது நிகழ்வை நோக்கப் பொய்தான்; எனினும் யாதொன்றும் தீமை இலாத சொல்லும் வாய்மை என உணர்க. இராமனை உடன் காத்து இணைபிரியாது இருத்தலின் 'இளங்கோனை' முதலிற் கூறினார் “ஓடு உருபு இங்கே உயர்ந்த இராமன் மேல் வந்தது; “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே ” என்பவாகலின். (தொல். சொல். வேற். மயங். 8) மனக்குறைவும், உடல்தளர்வும் இல்லாமல் இருப்பதே செல்வம் ஆகும். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே ” (குமர-திரட்டு - 475) “நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பவாதலின், “உலைவு இல் செல்வத்தனோ' என்பதனுள் எல்லாம் விசாரித்தானாக ஆயிற்று. முன் பாட்டிற்போல் 'இராமன் அரசச் செல்வத்தைப் பெற்றுத் தற்போது இழந்துள்ளான்' என்பது பரதன் சொல்வழி அவனையறியாமலே வந்ததை “உலைவு இல் செல்வத்தனோ' என்பது குறிப்பிடும். இது குறிப்புமொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they said, 'He is strong,' he rejoiced;
  2. 'And the young prince with leaf-wrought ornaments, together with my lord:
  3. is he in wealth that knows no faltering?' When they said, 'He is,'
  4. he raised his long, great hands above his head.

What the poem says

The envoys answer that the king is "strong". The commentary notes that this is strictly false, but a word that harms no one counts as truth, as the Kuṟaḷ teaches.

Paratan then asks after Ilakkuvaṉ, and with him Irāmaṉ, his lord, and when told they are well he joins his hands above his head in reverence towards them. His question about "wealth that knows no faltering" is another unknowing hint: Irāmaṉ has in fact just lost the kingdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valiyaṉ eṉṟu avar kūṟa, makiḻntaṉaṉ;
''ilai koḷ pūṇ iḷaṅkōṉ empirāṉoṭum
ulaivu il celvattaṉō? '' eṉa, 'uṇṭu ' eṉa
talaiyiṉ ēntiṉaṉ tāḻ taṭak kaikaḷē.