கம்பராமாயணம் 2181 · அயோத்தியா 9.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மற்றும் - அதன்மேலும்; சுற்றத்து உள்ளார்க்கும் - உறவின் முறையின் உள்ளவர்களுக்கும்; வரல் முறை - (கேட்க வேண்டிய) மரபு முறைப்படி; உற்ற தன்மை - நிகழ்ந்துள்ள நன்மைகளை; வினாவி - விசாரித்து (அறிந்து); உவந்த பின் - (பரதன்) மகிழ்ச்சி அடைந்த பிறகு; “எழுது அரு மேனியாய் - (அத் தூதுவர்) ஓவியத்தில் எழுதுதற்கு இயலாத அழகிய திருமேனியை உடைய பரதனே; கொற்றவன் தன் - மன்னனுடைய, திருமுகம்-; இற்றது ஆகும் - இத் தன்மையுடையது ஆகும்; கொள்க - இதனைப் பெற்றுக்கொள்க; என்றார் -.
முன்னர் விசாரிக்கப்படுபவர் பின்னர் விசாரிக்கப்படுபவர் என்றும், இன்னாரை இவ்வாறு விசாரித்தல் வேண்டும் என்றும் உலக வழக்கில் உள்ள முறைப்படி விசாரித்தலை “வரல் முறை' என்றார். இத் தூதுவர் ஓலை கொடுத்து நிற்பார் என்னும் வகையைச் சார்ந்த தூதுவர். தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான், ஓலை கொடுத்து நிற்பான் என்னும் மூவகையினர் தூதுவர் இவரை முறையே தலை, இடை, கடை என வழங்கல் நூல் வழக்கு. (குறள். பரி. உரை. 687)
ஆங்கிலம் · English translationAI
Translation
- And when he had asked in due order after the rest of his kin
- and how they fared, and was glad,
- 'This is it, O you whose beauty no painter could draw!
- Receive the king's sacred letter,' they said.
What the poem says
Paratan asks, in proper order, after the welfare of the rest of the royal family, and is glad at the answers. The envoys then hand him the king's letter (tirumukam).
The commentary notes that these are messengers of the lowest of the three classes described in the Kuṟaḷ commentary. The best kind frames the message himself, the middle kind repeats it word for word, and the third simply delivers a written letter.