கம்பராமாயணம் 2184 · அயோத்தியா 9.7

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாள் நிலா நகை தோன்ற , மயிர் புறம்
பூண , வான் உயர் காதலில் பொங்கினான் ;
தாள் நிலாம் மலர் தூவினன் , தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவ ஏ .

பொருள் · Meaning in Tamil

தம் முனைக் காணலாம் எனும் ஆசை - (பரதன்) தன் முன்னவனாகிய இராமனைக் காணப்போகிறோம் என்னும் ஆர்வம்; கடாவ - (மேன்மேலும் மிகுந்து) உள்ளத்தைத் தூண்டுதலினால்; வாள்நிலா நகை தோன்ற - ஒளி நிலாப்போன்ற மகிழ்ச்சிச் சிரிப்புத் தோன்றவும்; புறம் மயிர்பூண - உடம்பின் வெளிப்பகுதியெல்லாம் மயிர்க்கூச் செறிந்து அழகுறத் தோன்றவும்; வான் உயர் காதலின் - மிக உயர்ந்த அன்பினால்; பொங்கினான் - நிரம்பி வழியப்பெற்றவனாய்; தாள் - (மனத்தால்) இராமபிரான் திருவடிகளில்; நிலாம் மலர் - பொருந்திய மலர்களை; தூவினன் - பாவனையால் தூவி வழிபட்டான்.

மகிழ்ச்சி மிகப் பெற்றவர்க்குச் சிரிப்புத் தோன்றல் மயிர்க்கூச் செறிதல் இயல்பு. “ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயங் கூறுவார் 'மயிரினைச் செவ்வன் நின்றன' என்பது போலக் கொள்க. ” (தொல். பொருள். மெய்ப். பேரா. உரை 14) என்பதும் காண்க.

தம் முன்னைக் காணும் பெருவிருப்புத் தலைதூக்குதலின் இராமன் திருவடிகளைப் பாவனையால் கண்டு மலர்தூவித் தொழுதான் என்க. இராமபிரான் மாட்டுப் பரதனுக்குள்ள பெருங் காதலும், பக்தியும் இங்கே சொல்லப்பெறுவது கதையின் பின்னோட்டத்தில் பரதன் உளப்பாங்கைப் பெரிதும் சித்திரிக்கப் பயன்படும். நிலாம்மலர் - விளக்கம் சிறந்த மலர் எனப் பொருள்கூறலும் ஒன்று. முடங்கலின்மீது மலர்தூவினான் எனல் ஏற்புடைத்தாயின் கொள்க. “ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A smile bright as moonlight shining out, the hair on his body
  2. standing on end, he swelled with a love that rose to the sky;
  3. he scattered flowers at the feet, as the longing
  4. to see his elder brother drove him on.

What the poem says

What fills Paratan with joy is not his father's message as such but the thought that he will now see Irāmaṉ. He smiles and his hair stands on end with joy.

In his mind he scatters flowers at Irāmaṉ's feet in worship (another reading has him scattering them on the letter). The commentary stresses that this picture of Paratan's love and devotion for Irāmaṉ matters for everything that follows in his story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷ nilā nakai tōṉṟa, mayir puṟam
pūṇa, vāṉ uyar kātaliṉ poṅkiṉāṉ;
tāḷ nilām malar tūviṉaṉ, tammuṉaik
kāṇalām eṉum ācai kaṭāvavē.