கம்பராமாயணம் 2183 · அயோத்தியா 9.6

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சூடிச் சாதனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்த்தனன் ,
ஈடு நோக்கி , வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன் .

பொருள் · Meaning in Tamil

சூடி - (திருமுகத்தைத்) தலையிற் சூடிய பின்னர்; சந்தனம் தோய்த்து - (மேலே) சந்தனம்பூசி; சுற்று மண் மூடு உடை - சுருட்டப்பெற்று அரக்குமண் வைத்து (முத்திரை இட்டு) மூடுதல் உடைய; தோட்டின் முடங்கல் - பனை ஓலையால் ஆகிய கடிதத்தை; நிமிர்த்தனன் - நீட்டிப் (பிரித்துப்) பார்த்தான்; ஈடு - (அத் திரு முகத்தில்) இடப்பெற்ற செய்தியை; நோக்கி - பார்த்து (வாசித்து); வந்து எய்திய தூதர்க்கு - (அத் திருமுகத்தை) கொண்டு வந்து தன்னைச் சந்தித்த தூதுவர்க்கு; கோடி மேலும் நிதியம் - கோடி அளவிற்கு மேற்பட்ட செல்வங்களை; கொடுத்தனன் - (பரதன்) பரிசாக அளித்தான்.

நல்ல செய்தியைத் தாங்கிய தோற்றம் காட்டுதற்குச் சந்தனம் பூசப்பெற்றது. பனை ஓலையைச் சுருட்டி முத்திரை இட்டு அனுப்புதல் வழக்கம். சுருட்டுதலின் முடங்கல்” என்று திருமுகத்துக்கு ஒரு பெயர், வாசிப்பார் முதலில் சுருளைப் பிரித்து நீட்ட வேண்டுதலின் 'நிமிர்த்தனன்' என்றார். இடப்பெற்றது “ஈடு. ஓலையில் இடப்பெற்ற செய்தி என்பது பொருள்.

கோசல நாட்டில் நிகழ்ந்த அவலச்செய்தி எதுவும் இல்லாத திருமுகமே அனுப்பப்பட்டது. முடிசூட்டு விழாவாகிய நற்செய்தியும் அதில் இல்லை. வசிட்டரின் ராஜதந்திரம் எவ்வாறு சொல் அமைத்தது என்ற குறிப்பினைக் கவிஞர் தரவில்லை. துயர் ஊட்டாமல் பரதனை வரவழைக்கவேண்டும் என்பதொன்றே மன்னன் சார்பில் செயல்பட்ட முனிவரின் நோக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having set it on his head, he touched it with sandal paste, and the palm-leaf letter,
  2. rolled and sealed with clay, he unrolled;
  3. he read what was written there, and on the envoys who had come
  4. he bestowed treasure beyond a crore.

What the poem says

The letter is a rolled palm-leaf, sealed with lac; sandal paste on it is a sign of good news. Paratan unrolls it, reads it, and rewards the messengers with immense wealth.

The commentary observes that the poet does not say what the letter said. Vaciṭṭaṉ had to bring Paratan home without alarming him, so the letter carried neither the grief of the king's death nor the planned coronation of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūṭic cantaṉam tōyttuṭaic cuṟṟu maṇ
mūṭu tōṭṭiṉ muṭaṅkal nimirttaṉaṉ,
īṭu nōkki, vantu eytiya tūtarkkuk
kōṭi mēlum nitiyam koṭuttaṉaṉ.