கம்பராமாயணம் 2186 · அயோத்தியா 9.9

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன் சென்ற போது) யானை சுற்றின - யானைகள் சூழ்ந்து சென்றன; தேர் இரைத்து ஈண்டின - தேர்கள் மணி ஒலித்து நெருங்கிச் சென்றன; மான வேந்தர் குழுமினர் - பெருமையுடைய அரசர்கள் திரண்டு சென்றனர்; வாள் உடைத் தானை சூழ்ந்தன - வாள் முதலிய கருவிகளை ஏந்திய சேனா வீரர்கள் சுற்றிச் சென்றனர்; சங்கம் முரன்றன - சங்குகள் ஒலித்தன; பேரி மீன வேலையின் விம்மின - பெருமுரசுகள் மீனுடைய கடல் ஒலிபோல முழங்கின.

சக்கரவர்த்தியின் குமாரர்கள் ஆதலின் எங்குச் செல்லினும் சேனையோடு செல்லுதல் அவர்க்கு இயல்பு ஆதலின் படை எழுச்சியும் கூறற்பாலதாம். சுற்றின, ஈண்டின, சூழ்ந்தன எனவும், முரன்றன, விம்மின எனவும் சொற்களை மாற்றியமைத்த அழகு இன்பம் பயப்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephants closed around; chariots rumbled and crowded close;
  2. proud kings gathered; troops bearing swords
  3. surrounded them; conches sounded;
  4. the great drums boomed like the fish-filled sea.

What the poem says

Paratan does not travel alone. As a son of the emperor he goes with a full army: elephants, chariots, allied kings and sword-bearing infantry, with conches blowing and great drums booming like the ocean.

The commentary admires how the poet varies the verbs for "surround" and for "sound" to avoid monotony.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāṉai cuṟṟiṉa; tēr iraittu īṇṭiṉa;
māṉa vēntar kuḻumiṉar; vāḷ uṭait
tāṉai cūḻntaṉa; caṅkam muraṉṟaṉa;
mīṉa vēlaiyiṉ vimmiṉa pēriyē.