கம்பராமாயணம் 2187 · அயோத்தியா 9.10

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கொடி நெருங்கின ; தொங்கல் குழுமின ;
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின ; பூண் ஒளி பேர்ந்தன ;
இடி துவன்றின மின் என எங்குமே .

பொருள் · Meaning in Tamil

(அச்சேனை எழுச்சி) எங்கும் கொடி நெருங்கின - கொடிகள் நெருங்கி வந்தன; தொங்கல் குழீஇயின - பீலிக்குஞ்சம் எனப்படும் தொங்கல் திரண்டு வந்தன; வடி நெடுங்கண் மடந்தையர் - மாவடுப் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர்; ஊர் மடப்பிடி - ஏறிச் செலுத்துகின்ற இளைய பெண் யானைகள்; துவன்றின - நெருங்கிச் சென்றன; பூண் ஒளி - (அம்மகளிர் அணிந்த) கலன்களின் ஒளி; இடி துவன்றின மின் என - இடியொடு நெருங்கிய மின்னலைப்போல; எங்கும் பேர்ந்தன - எல்லா இடங்களிலும் விட்டு விளங்கின.

இம் மகளிர் அரச மகளிர்; போர்க்குச் செல்லாத சேனைகள் ஆதலின், வடி - மாவடு; கூர்மை எனப் பொருள்கூறலும் ஒன்று. அணிகள் ஒளியும், ஒலியும் விட்டு விட்டு நிகழ்தலின் “இடி துவன்றின மின்' என உவமை கூறப் பெற்றது எனலாம். தொங்கல் - பிச்சம் எனப்பெறும், “ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Banners crowded close; tassels massed together;
  2. young cow-elephants ridden by women with long, mango-slice eyes
  3. thronged; and the gleam of their ornaments flashed
  4. everywhere, like lightning crowding with thunder.

What the poem says

The procession continues: thick banners, clusters of peacock-feather tassels, and young female elephants carrying the ladies of the court, since this is a royal progress, not a march to war.

The women's jewels flash and jingle as they ride, and the poet compares them to lightning flashing amid thunder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭi neruṅkiṉa; toṅkal kuḻīiyiṉa;
vaṭi neṭuṅ kaṇ maṭantaiyar ūr maṭap
piṭi tuvaṉṟiṉa; pūṇ oḷi pērntaṉa;
iṭi tuvaṉṟiṉa miṉ eṉa eṅkumē.