கம்பராமாயணம் 22 · பால 2.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரம்பு எலாம் முத்தம் - (வயல்) வரப்புகளிலெல்லாம் முத்துக்கள்; தத்தும் மடை எலாம் பணிலம் - தண்ணீர் பாயும் மடைகளிலெல்லாம் சங்குகள்; மாநீர்க் குரம்பு எலாம் செம்பொன் - மிகுந்த நீர்ப் பெருக்குடைய செய்கரை களிலெல்லாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை - எருமைகள் படிகின்ற பள்ளங்களிலெல்லாம் செங்கழுநீர் மலர்கள்; பரம்பு எலாம் பவளம் - பரம் படித்த இடங்களி லெல்லாம் பவளங்கள்; சாலிப் பரப்பு எலாம் அன்னம் - நெற்பயிர் நிறைந்த பரப்புகளிலெல்லாம் அன்னங்கள்; பாங்கர் - அவற்றின் பக்கங்களில் இருக்கின்ற; கரம்பு எலாம் செந்தேன் - சாகுபடி செய்யப்படாத நிலங்களி லெல்லாம் செந்தேன்; சந்தக் கா எலாம் களிவண்டு ஈட்டம் - அழகிய சோலைகளிலெல் லாம் மதுவுண்டு மகிழும் வண்டுகளின் கூட்டம்; (ஆக இவ்வாறு வளங்கள் அங்கே பெருகியுள்ளன).
பலவகை வளங்களும் கோசல நாட்டில் கொழித்திருந்தன என்பது கருத்து. பயிர்த்தொழிலுக்கு ஏற்பப் பண்படுத்தாத கரம்பிலும் செந்தேன் பெருக்கு இருந்தது என்பதொன்றே கோசலத்தின் வளத்தைப் புலப்படுத்தப் போதுமானது. குரம்பு: செய்கரையாகிய அணை. சந்தம்: அழகு முத்தம் முதலான எழுவாய்களுக்கு உள்ளன என்பது பயனிலையாக உரைக்கப்பட்டது - எச்சப் பயனிலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Every ridge is pearls; every gushing sluice is conches; along the great waters
- every dyke is red gold; every buffalo wallow is crowded with red water lilies;
- every levelled plot is coral; every stretch of paddy is swans; and close by,
- every untilled patch is red honey; every lovely grove a swarm of drunken bees.
What the poem says
The poet begins describing the wealth of Kōcalam with a catalogue of plenty. Pearls lie on the ridges between the paddy fields and conches in the sluices. Red gold gleams on the dykes, red water lilies fill the buffalo wallows, coral lies on the levelled fields, and swans crowd the rice. Even the uncultivated waste land drips with honey, which alone shows how rich the country is. In every grove, bees drunk on nectar hum.