கம்பராமாயணம் 23 · பால 2.3

Section பால காண்டம் / 2. நாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆறு பாய் அரவம்; மள்ளர் ஆலை பாய் அமலை; ஆலைச்
சாறு பாய் ஒதை; வேலைச் சங்கின் வாய் பொங்கும் ஓசை;
ஏறு பாய் தமரம்; நீரில் எருமை பாய் துழனி; இன்ன
மாறு மாறு ஆகி தம்மின் மயங்கும் மா மருத வேலி.

பொருள் · Meaning in Tamil

மா மருத வேலி - பெருமைக்குரிய (கோசல நாட்டின்) மருத நிலத்து எல்லைக்குள்; ஆறு பாய் அரவம் - ஆற்று நீர் பாய்வதால் எழும் ஓசையும்; மள்ளர் ஆலை பாய் அமலை - உழவர்கள் ஆலையாடுதலால் உண்டாகும் ஓசையும், ஆலைச் சாறு பாய் ஓசை - அக் கரும்பாலைகளில் கருப்பஞ்சாறு பாய்வதால் எழுகின்ற ஓசையும், வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை - நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து பெருகும் ஓசையும்; ஏறுபாய் தமரம் - எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது எழும் ஓசையும்; நீரில் எருமை பாய் துழனி - நீர்நிலைகளில் எருமைகள் பாய்வதால் உண்டாகும் ஓசையும்; இன்ன - ஆகிய இத்தகைய ஓசைகள்; மாறு மாறு ஆகி - வெவ்வேறாக அமைந்தனவாகி; தம்மில் மயங்கும் - தமக்குள் ஒன்றோடொன்று கலந்து ஒலிக்கும்.

ஓரிடத்து எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறியலாகும். சங்கு கடலுக்கு உரியது; புதுவெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்து வந்தது. தனித்தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை 'மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்' என விளக்கினார். அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி; இவை ஒரு பொருட் சொற்கள். பொருட் பின்வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sound of rivers rushing; the din of farmers at the cane presses; the roar
  2. of the pressed juice pouring; the noise that swells from the mouths of conches on the banks;
  3. the clamour of bulls charging; the splashing of buffaloes plunging into water: such sounds,
  4. each different from the next, blend into one another within the great farmland's bounds.

What the poem says

The poet now describes the land through its sounds: water rushing in the rivers, farmers working the sugarcane presses, juice gushing from them, and conches sounding on the banks. Bulls clash and buffaloes plunge into pools. The conches belong to the sea, and the new flood has carried them upstream into the farmland.

Each sound arises separately, yet they spread and mingle into one great hum of prosperity. The poet uses six different words that all mean "sound", one for each source, a figure of repetition in meaning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṟu pāy aravam; maḷḷar ālai pāy amalai; ālaic
cāṟu pāy ōtai; vēlaic caṅkiṉ vāyp poṅkum ōcai;
ēṟu pāy tamaram; nīril erumai pāy tuḻaṉi; iṉṉa
māṟu māṟu āki tammil mayaṅkum mā maruta vēli.