கம்பராமாயணம் 24 · பால 2.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தண்டலை மயில்கள் ஆட - சோலைகளிலே மயில்கள் ஆடவும், தாமரை விளக்கம் தாங்க - தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்கவும்; கொண்டல்கள் முழவின் ஏங்க - மேகங்கள் மத்தளம் போல ஒலிக்கவும்; குவளை கண் விழித்து நோக்க - குவளைக் கொடிகளில் மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்கவும்; தெண் திரை எழினி காட்ட - நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்டவும்; தேம் பிழி மகர யாழின் - தேனை ஒத்த மகர யாழ் இசை போல, வண்டுகள் இனிது பாட - வண்டுகள் இனிமையாகப் பாடவும், (இவ்வாறு இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கிலே) - மருதம் வீற்றிருக்கும் - மருத நாயகி வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந்தது.
உரையாசிரியர்கள் பிறரெல்லாம் மருத வேந்தன் என்றனர்; அது பொருத்தமே. எனினும், இயற்கையை அன்னை எனப் போற்றும் மரபினை ஓம்பி இங்கே மருதம் நாயகியாக உரைக்கப்பட்டது. '...... எதிரே கொலு வீற்றிருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்' என்பர் பேரா. அ. ச. ஞா. (கம்பன் கலை - பக.4). "இந்த இடத்தில் கவிஞன் கையாளும் உவமை, இயல்புக்கும் மரபுக்கும் ஒத்துக் கற்போர்க்கு இன்பம் பயப்பதாகும். கொண்டல் முழங்கின் மயில் ஆடும்; குவளை மலர்ந்திருக்கும் மாலைப் போதில் தாமரை குவிந்துவிடும். இந்த இயல்பு பிறழாமல் முறைப்படுத்தும் கவிஞன் திறன் துய்ப்பார்க்குச் சுவை ஊட்டுமன்றோ?" (பக.5)
தண்டலை; சோலை, குளிர்ந்த இடம் (தண் + தலை) என்ற பொருள் உடையதாய்ப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. குவளைக் கண் என்பது எதுகை நோக்கிக் குவளை கண் என நின்றதாகக் கொண்டு பொருள் கூறுதலும் உண்டு. யாழ்: யாழிசைக்கு ஆகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- With peacocks dancing in the groves and lotuses holding up lamps,
- the clouds rumbling like drums, the blue lilies opening their eyes to watch,
- the clear ripples drawn back like a curtain, and, like the honey-sweet makara lute,
- the bees singing sweetly: so the farmland sits enthroned in state.
What the poem says
The farmland is pictured as a queen seated in her court, watching a performance. Peacocks dance in the groves, red lotuses hold up their blooms like lamps, and the rumbling clouds are the drums. Blue water lilies open like eyes to watch, the ripples on the water are the stage curtain, and bees supply the music of the lute.
Other commentators speak of the farmland as a king; this reading follows the tradition of seeing nature as a mother and queen. The images also follow nature closely: peacocks dance when the clouds thunder, and the order of the scene matches what happens in the land.