கம்பராமாயணம் 25 · பால 2.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வண்டும் தகை வரும் திருவும் - வண்டுகளும் அழகு வளர்கின்ற திருமகளும்; தாமரைப் படுவ - தாமரை மலர்களில் தங்கியிருப்பனவாம்; மாதர் கண்களும் காமன் அம்பும் - விலைமாதர் கண்களும் மன்மதன் அம்புகளும்; தண்தார்க் காமுகர்ப் படுவ - குளிர்ந்த மாலை அணிந்த காமுகர்களை தாக்குவனவாம்; வாரிப் பவளமும் வயங்கு முத்தும் - கடலில் விளையும் பவளமும் ஒளியால் விளங்குகின்ற முத்துகளும்; மாமுகில் படுவ - கார்மேகங்களில் தங்குவனவாம்; மெய்யும் நாம நூல் பொருளும் - உண்மையும் புகழ் வாய்ந்த நூல்கள் கூறும் பொருளும்; நா முதல் படுவ - கோசல நாட்டு மக்களின் நாவிலே தங்குவனவாம்.
தாக்கப்பெறுவோர் காமுகராகக் கூறப்படுதலின் 'மாதர்' இங்கே விலைமாதர் எனப் பொருள்பட்டது. கடல் நீரைப் பருகிய மேகம் உடன் பவளங்களையும் முத்தையும் கொண்டன; மன்னுயிர்க்கு இன்றியமையா நீரைப் பொழிந்துவிட்டுப் பவளத்தையும் முத்தையும் தன்னிடத்து வைத்துக்கொண்டது. கோசல நாட்டு மக்கள் வாய்மையுடையவர், நன்னூற் பொருளே நவில்வர் என்ற கருத்து மிகவும் பேணத்தக்கது. 'படுவ' - சொற்பொருட் பின்வரு நிலையணியாக வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the lotuses are found the bees and the gracious goddess Tiru;
- on lovers wearing cool garlands fall women's eyes and the arrows of Kāmaṉ;
- in the great clouds are found the sea's coral and the shining pearls;
- on the tongue are found truth and the meaning of renowned books.
What the poem says
The verse plays on one word, paṭuva, which can mean "is found in", "dwells in" and "strikes", and uses it four times. Bees and Lakṣmī, the goddess of fortune, dwell in the lotus. Women's glances and the arrows of the love god strike men in love. Coral and pearls are found in the clouds, which drank them up with the sea water, poured out the rain and kept the treasure. And on the tongues of the people of Kōcalam dwell only truth and the teachings of good books.