கம்பராமாயணம் 2229 · அயோத்தியா 9.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மல் பக மலர்ந்த தோள் - மல் தொழில் தொலையும்படி அகன்று பரந்த தோள்களை உடைய; மன்னர் மன்னனே! - சக்கரவர்த்தியே!; பல்பகல் நிழற்றும் - பல காலமாக (உலகுக்கு) நிழலைத் தரும்; நின் கவிகைப் பாய்நிழல் - நினது வெண்குடையின் பரந்துபட்ட நிழற்கீழ்; நிற்பன பல் உயிர் - வாழ்வனவாகிய அனைத்துயிர்களும்; உணங்க - (நின் குடை நிழல் இன்மையால்) வாடி வற்ற; நீ-; நெடுங் கற்பக நறு நிழல் - (விண்ணுலகின்கண் உள்ள) நெடிய கற்பக மரத்தின் நறுமணம் வீசும் நிழலை; காதலித்தியோ - விரும்பினாயோ?
பிறருக்கு நிழல் செய்த நீ இப்போது ஒரு நிழலின்கண் இருக்க விரும்பியது சிறந்ததாகுமா என்பது பரதன் வினாவாகும். உணங்கல் - வெயிலிற் காய்தல். குடைநிழல் என்பதால் 'உணங்க' என உபசரிக்கப்பெற்றது. அறமும் தண்ணளியும் இன்றிக் குடிமக்கள் அல்லற்படுவதை 'உணங்க'” லாகக் கொள்க. 'பல்பகல்' என்றதை முன் கூறிய “அறுபதினாயிரம் ஆண்டு ” (182) என்றதனால் அறிக. “காதலித்தியோ” என்றது அக்கற்பக நிழலும் சம்பரனைத் தொலைத்து நீ அளித்த நிழலன்றோ என்னும் குறிப்பினை உள்ளடக்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While the many lives that stood in the broad shade of your royal umbrella,
- which gave shade through so many days, wither in the sun, have you
- come to love the long, fragrant shade of the karpaka tree,
- O king of kings, whose broad shoulders put wrestlers to rout?'
What the poem says
A king's white parasol is the emblem of his protection: its "shade" shelters all his subjects. Now that Tacarataṉ is dead, his people are left to wither in the sun of misfortune.
Paratan asks whether the king has deserted them for the cool shade of the karpaka, the wish-granting tree of heaven. The commentary adds a further irony: that heavenly shade was itself his gift, since he saved heaven from the demon Campara (Śambara).