கம்பராமாயணம் 2231 · அயோத்தியா 9.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(ஐயா!) இயம் கெழு தானையர் - வாத்தியங்கள் நெருக்கி இருக்கின்ற சேனையை உடையவர்; இறுத்த - (உனக்குத் தோற்று) கப்பமாகக் கட்டிய, மா திறை - பெரிய திறைப் பொருளை; உயங்கல் இல் - வருந்துதல் இல்லாத; மறையவர்க்கு - வேதம் வல்ல அந்தணர்க்கு; உதவி - கொடுத்து; உம்பரின் - விண்ணுலகில் உள்ள தேவர்கள் நலத்தின் (பொருட்டாகச் செய்யப் பெறும்); அயம் கெழு வேள்வியோடு - குதிரையைக் கொண்டு செயப்பெறும் அசுவமேத யாகத்துடனே; அமரர்க்கு ஆக்கிய - தேவர்களுக்காக விதித்த; வயங்கு எரி - விளங்குகின்ற (காருகபத்தியம் முதலிய) யாக அக்கினி காரியங்களையும்; வளர்க்கலை - (முன்பு இடையறாது செய்து வந்தாய்; இப்போது அவற்றைச்) செய்யாமல்; வைக வல்லையோ - சோம்பித் தங்கியிருக்க மாட்டுவையோ?
மறையவர்க்கு உதவலும், யாகங்கள் செய்தலும், பூசுரரையும், சுரரையும் காத்தற் பொருட்டு, இரண்டனையும் இடையறாது செய்த தயரதன் விண்ணுலகில் எதுவும் செய்யாமல் எவ்வாறு இருக்க இயலும் என்று எண்ணிப் புலம்பினான் என்க. அயம் - அஜம் என்னும் வடசொல். குதிரை. 'வாம்பரிவேள்வி' (271) என்று முன்னும் கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who gave to the tireless Vedic priests the great tribute
- paid by kings whose armies throng with drums, and for those in heaven,
- with the horse sacrifice, kept the shining fires kindled for the gods:
- can you bear to rest there, no longer tending them?'
What the poem says
All his life Tacarataṉ gave lavishly to the Brahmins out of the tribute paid by conquered kings, and kept up the sacred fires and the great horse sacrifice for the sake of the gods.
Paratan cannot imagine such a king sitting idle in heaven, with no gifts to give and no sacrifices to perform.