கம்பராமாயணம் 224 · பால 5.56

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே
உறு துயர் தணிந்தது அவ் உலகம்; வேந்து அருள்
செறி குழல் போற்றிடத், திருந்து மா தவம் அத்து
அறிஞன் ஆண்டு இருக்கும் நல், அரச!' என்றனன்.

பொருள் · Meaning in Tamil

வறுமை நோய் தணிதர - (மழை இல்லாமையால் நீண்ட காலம் அந்த நாட்டைப் பற்றியிருந்த கொடிய வறுமை நோய் தணியும்படி); வான் வழங்கவே - பெருமழை பொழியவே; அவ்வுலகு உறுதுயர் தவிர்ந்தது - அந்த நாடு மிக்க துன்பம் நீங்கப் பெற்றது; வேந்து அருள் செறிகுழல் போற்றிட - வேந்தன் பெற்ற செறிந்த கூந்தலையுடைய சாந்தை போற்றி உபசரிக்க; திருந்து மாதவத்து அறிஞன் - திருத்தமான தவத்தை உடைய அறிஞனாகிய அம்முனிவன்; ஆண்டு இருக்கு நன் அரச என்றனன் - அங்கே வாழ்கின்றான் அரசே என வசிட்டன் கூறினான்.

வசிட்டன் தயரதனுக்குக் கூறிய கலைக்கோட்டு முனிவரின் வரலாறு இது. அரசே! அம்முனிவன் உரோமபதன் நாட்டில் வாழ்கிறான் என்று வசிட்டன் கூறினான். உறுதுயர்: வினைத்தொகை. தணிதர: தணிய. உலகமென்பது நாட்டைக் குறித்து நின்றது. செறிகுழல்: வினைத்தொகை. திருந்திய தவம் அறிவுடைமைக்குக் காரணமென்பதால் “திருந்து மாதவத்தறிஞன்” என்றார். குழல்: கூந்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As the sky poured rain, so that the disease of want abated,
  2. that land was freed from the grief it had suffered. With the king's daughter
  3. of thick tresses tending him, the sage of refined great austerity
  4. lives there now, O king,' he said.

What the poem says

This ends Vacittaṉ's account of the sage. The rains came as soon as the sage arrived, the drought and famine ended, and he now lives in Urōmapataṉ's kingdom, cared for by his wife Cāntai.

The commentary observes that 'world' here means simply that country, and that the sage's wisdom is linked to his well-tempered austerity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṟumai nōy taṇitara vāṉ vaḻaṅkavē
uṟu tuyar tavirntatu av ulakam; vēntu aruḷ
ceṟikuḻal pōṟṟiṭa, tiruntu mā tavattu
aṟiñaṉ āṇṭu irukkunaṉ, araca!' eṉṟaṉaṉ.