கம்பராமாயணம் 223 · பால 5.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வேறு உரைக்குவது இலதென - (முனிவனை ஆசனத்தில் அமரச் செய்த பின்னர்) இனி வேறு உரைப்பதற்கு எதுவுமில்லை என்னும்படி; அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி - அருக்கியம் கொடுத்தல் முதலான கடமைகள் பலவும் செய்தளித்து; தான் அருள் முருக்கிதழ் சாந்தையாம் முக நலாள் தனை - மன்னன் தான் பெற்ற முருக்கம் பூப் போன்ற இதழ்களையுடைய சாந்தை என்னும் அழகிய பெண்ணரசியான தன் மகளை; இருக் கொடு விதிமுறை - வேத நெறிப்படி இருக்கு முதலான வேதமந்திரங்களைக் கூறி; இனிதின் ஈந்தனன் - இனிமையாக மணம் செய்து கொடுத்தான்.
அருக்கியம்: பதினாறு வகை உபசாரங்களில் முதன்மையானது. கைகழுவ நீர் தருதல் முதலியனவாம். கடன்: கடமை. ஆற்றுதல்: செய்தல். உரைக்குவது: உரைப்பது. சாந்தையை இம்மன்னன் தயரதனிடமிருந்து பெற்று வளர்த்து வந்தான் என்பது வான்மீகம் கூறும் கருத்தாம். நலாள்: நல்லாள் தொகுத்தல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He performed the rites, the offering of water first among them, so that nothing
- further remained to be said; and gladly, his own daughter,
- Cāntai, the lovely-faced one with lips like murukku blossoms,
- he gave in marriage duly, with the chants of the Rig Veda.
What the poem says
Having honoured the sage with every rite of hospitality, beginning with arukkiyam, the offering of water, the king gives him his daughter Cāntai in marriage with Vedic rites. The murukku is the flame-coloured flower of the Indian coral tree, a stock comparison for red lips.
The commentary notes that, according to Vālmīki, Cāntai was born to Tacarataṉ and raised by this king as his own.