கம்பராமாயணம் 222 · பால 5.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளநகர் அலங்கரித்து எதிர் மிடைந்திட - வளம் பொருந்திய அந்நகரை (மன்னன் கட்டளைப்படி) அலங்கரித்து (அந்த நகரத்து மக்கள்) எதிர்கொண்டழைத்துச் செல்வதற்குக் கூட்டமாய் நெருங்கி வர; வேந்தன் முனியொடு - அவ்வரசன் கலைக்கோட்டு முனிவனுடன்; அடைந்தனன் கோயில்புக்கு - அந்நகருள் சென்று அரண்மனைக்குள் போய்; ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி - குறைவுபடாத பொன் திணித்துப் புனைந்த ஒரு மண்டபத்தை அடைந்து; ஓர் மடங்கல் ஆதனத்து இடை - ஒரு சிங்காதனத்தின் மேலே; முனியை வைத்தனன் - அந்த முனிவனை அமரச் செய்தான்.
மிடைந்திட: நெருங்க. கோயில்: கோ-இல் அரசமாளிகை. பொன்குழாம்: பொன் மிகுதி. உறையுள்: இருப்பிடம் (மண்டபம்). மடங்கல்: சிங்கம். ஆதனம்: ஆசனம். முனிவன் இருந்தான் என்னாமல் அரசன் அமரச் செய்தான் என்று கூறியது. அரசனது உபசரிப்பைக் கண்ட முனிவன் பிரமித்துச் செயலற்றிருந்தான் என்பதை உணர்த்தும். மாமுனிவனை நகரை அலங்கரித்து மக்கள் அழைத்துச் செல்ல மண்டபம் அடைந்து அரியணையில் இருத்தினான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He reached the rich city; the people, having decked it, thronged
- to meet him; with the sage the king entered his palace,
- came to a hall of gold heaped without stint, and on a
- lion throne he seated the sage.
What the poem says
The city has been decorated and its people crowd out to welcome the sage. The king leads him into a hall worked with gold and places him on a lion throne.
The poet says the king 'seated' the sage rather than that the sage sat down, hinting that the forest-bred ascetic was so overwhelmed by the honours that he was carried along by them.