கம்பராமாயணம் 221 · பால 5.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருள் சுரந்து - (உள் எழுந்த சினம் நீங்கிய அம்முனிவன்) அருளைச் சுரந்து; அரசனுக்கு ஆசியும் கொடுத்து - அந்த வேந்தனுக்கு ஆசியும் கூறி; உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி - உருண்டு செல்லும் தேரின் மீது விரைந்தேறி; நல்பொருள் தரும் முனிவரும் தொடர - நல்ல கருத்துகளையே எப்போதும் தரும் மற்ற முனிவர்களும் பின்வர; மருள் ஒழி உணர்வு உடை - மயக்கம் நீங்கிய நல்லுணர்வுடைய; வரத மாதவன் போயினான் - யாவருக்கும் வரந்தர வல்ல தவத்தையுடைய கலைக்கோட்டு முனிவன் சென்றான்;
போயினான்: நகரை நோக்கிச் சென்றான். சினம் நீங்கி உண்மையை உணர அருள் பெருகும் என்பதால் “அருள் சுரந்து” என்றான். ஆசியும் என்பதில் உள்ள “உம்” எண்ணுப் பொருள் தந்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His grace welling up, he gave the king his blessing too,
- and quickly climbed onto the rolling chariot; while good
- sages, who give sound counsel, followed after him, he went,
- the great ascetic able to grant boons, whose understanding was free of delusion.
What the poem says
Vacittaṉ is still telling Tacarataṉ the story of the sage Kalaikkōṭṭu Muṉivaṉ. His anger gone, the sage blesses the king who had lured him out of the forest and sets off by chariot for that king's city, other sages following.
The poet says grace 'welled up' in him because, once anger leaves and the truth is seen, compassion naturally overflows.