கம்பராமாயணம் 2293 · அயோத்தியா 9.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“யான் -; அலர் கரும்பு செந்நெல் அம்கழனிக் கான நாடு - விரிந்த கரும்பையும் செந்நெல்லையும் உடைய அழகிய வயல்களாற் சூழ்ந்த காடுகளை உடைய என் நாட்டினை; அரும்பகை கவர்ந்து உண - (வெல்லுதற்கு) அரிய பகைவன் கைப்பற்றிக்கொண்டு அநுபவிக்க; ஆவி பேணினென் - உயிரைக் காப்பாற்றிக் கொண்டவனாய்; இரும்பு அலர் நெடுந்தளை - இரும்பாற் செய்யப்பெற்ற நீண்ட விலங்கு; ஈர்த்த காலொடும் - இழுக்கும் கால்களோடும்; விரும்பலர் முகத்து எதிர் - என்னை விரும்பாத பகைவர் முன்னால்; விழித்து நிற்க - விழித்து நிற்பேனாக.”
விலங்கைப் பூட்டிக் கொண்டேனும் உயிரைக் காத்துக் கொள்ள ஆசைப்படுதல் அரசகுலத்தோர்க்கு மிகவும் இழுக்கு. ஆதலின் இங்ஙனம் கூறினான். இதுவரை உள்ள பாடல்கள் பரதன் சொன்ன சூளுரைகளாகும். “தீயன கொடியவள் செய்த செய்கையை, நாயினேன் உணர்ந்து” அதற்கு உடன்பட்டு வரம்பெறுதலும், இராமன் காடேகச் செய்ததும் நடந்திருக்குமாயின் இத்தகைய தன்மைகளை யான் அடைவேனாக என்று பரதன் சபதம் செய்தான் என்க. பரதன் சூளுரையை ஒரு காரணமாக்கி நல்லறங்கள் பலவற்றை ஒரு சேரக் கூறினார் கம்பர் என்று கொள்க. அரசாட்சியும், போரும் பற்றிய பந்துச் செய்திகளைப் பரதன் கூறினான்; அவன் அரசகுமாரன் ஆகலின் அத்தகைய செய்திகள் அவன் சூளுரையில் மிகுதியும் பயிலுதல் இயல்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'While a mighty foe seizes and enjoys my land of forests and lovely fields
- where sugarcane and red paddy flourish, clinging to my life,
- with legs dragging long fetters of iron,
- may I stand staring before the faces of those who hate me.'
What the poem says
The last of Paratan's oaths: may he be the king whose rich land of sugarcane and red rice is seized by an enemy, and who, to save his life, stands in iron chains before his foes and looks them in the face.
For one of royal blood, to cling to life even in fetters is the ultimate disgrace. Through Paratan's oaths the poet gathers many teachings on right conduct, and because Paratan is a prince, so many of them concern kingship and war.