கம்பராமாயணம் 231 · பால 5.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செவ்வி நறும் சாந்தளித்து - (விருந்து முடிந்தவுடன்) மணம் மிகுந்த சந்தனம் அளித்த உரோமபதன்; தேர் வேந்தன் தனைநோக்கி - தயரத மன்னனைப் பார்த்து; நீ இவண் சேர்ந்த கவ்வை உரைத்தருள்தி என - தாங்கள் இங்கு வந்த காரியத்தைச் சொல்லியருள வேண்டுமென்றுரைக்க; அரசர் பிரான் நிகழ்ந்த பரிசு கழறலோடும் - அதற்கு அரசர்க்கு அரசனாகிய தயரதன் நிகழ்ந்த செய்தியைச் சொல்லலோடும்; அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனை - பொறாமை முதலிய தீய குணங்களை நீக்கிய மனத்தை உடையவரான கலைக்கோட்டு முனிவரை; கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் - அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன்; ஆன்ற செவ்வி முடியோய் எனலும் - உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன் கூறியதும்; தேர் ஏறிச் சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் - உடனே தயரதன் தேரேறி, சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.
செவ்வி: அழகு. இங்குப் பக்குவம் என்னும் பொருளைத் தந்து நின்றது. நறுமை: மணம். சாந்து: சந்தனம் முதலிய மணப்பொருட் கலவை. கவ்வை: காரியம். பரிசு: தன்மை. அவ்வியம்: அழுக்காறு. அங்கண்: அங்கே முதல் நீண்டு 'ஆங்கண்' என நின்றது. நறுஞ் சாந்து: பண்புத்தொகை. விருந்துண்டு மகிழ்ந்ததும் சந்தனம், வெற்றிலை, பாக்கு ஆகியவை தந்து உபசரித்தல் மரபு. நிகழ்ந்த பரிசாவது, மக்கட்பேறளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறியது முதல் முனிவரை அழைத்துப் போக வந்ததுவரை நிகழ்ந்த செய்தியைத் தயரதன் உரோமபத மன்னனுக்குக் கூறினன் என்பதே.
சாந்தளித்து - நோக்கி - அருள்தி என - நிகழ்ந்த பரிசு கழறலோடும் - அருந்தவனை - விடுப்பன் என்றும் தேரேறி அயோத்தி சேர்ந்தான் என்றும் முடிக்க
உரைத்தருள்க: உரைக்க என்பதாம். “அருள்” மரியாதை குறித்து வந்த பகுதிப் பொருள் விகுதி. கொணர்ந்து விடுப்பென் எனப்பொருள் முடிவுபெறும். “கொணர்ந்து” வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having offered fine fragrant sandal, he looked at the chariot king: 'The business that brought you here,
- please tell it,' he said; and when the lord of kings related all that had happened,
- 'I will bring the great ascetic of lofty mind, who has cast off envy, and leave him with you there,
- you who wear the noble, beautiful crown,' he said; and the king mounted his chariot and reached Ayōtti with his army.
What the poem says
After the feast Urōmapataṉ offers sandal paste, the customary courtesy along with betel leaf and areca nut, and asks why Tacarataṉ has come. Tacarataṉ tells him everything, from Vacittaṉ's advice to perform a sacrifice for sons to his own journey.
Urōmapataṉ promises to bring the sage to Ayōtti himself, and Tacarataṉ returns home with his army.