கம்பராமாயணம் 230 · பால 5.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆடகப் பொன் சுடர் இமைக்கும் அணிமாடத்து இடை - பொன்னொளி விளங்கும் அழகிய மாளிகை ஒன்றிலே அமைந்த; ஒரு மண்டபத்தை அண்மி - ஒரு மண்டபத்தை அடைந்து; பாடகச் செம்பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப - பாடகம் அணிந்த அழகிய பாதங்களை உடைய மகளிர் பலர் பல்லாண்டு பாட; ஏடுதுற்ற வடிவேலோன் தனை பைம்பொன் பீடத்து இருத்தி - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூரிய வேலை உடைய தயரதனைப் பசிய பொன்மயமான ஆசனத்திலே இருக்கச் செய்து; கடன் முறைகள் யாவும் நேர்ந்து - பேரரசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் யாவும் செய்து; தோடு துற்ற மலர்த்தாரான் விருந்து அளிப்ப - இதழ் நெருங்கிய மாலையணிந்த மன்னனாகிய உரோமபதன் விருந்து கொடுக்க; சுரர்நாடு ஈந்தான் இனிது உவந்தான் - அமரர் நாட்டை மீட்டுக் கொடுத்தவனான தயரத மன்னன் இனிதே மகிழ்ந்தான்.
ஆடகம்: ஒரு வகைப் பொன். ஆடகப்பொன்: இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. இமைத்தல்: ஒளிர்தல். அண்மி: சேர்ந்து. பாடகம்: காலில் அணியும் அணிகலன். பதுமமலர்: உவமையாகு பெயர். “செம்பதும மலர்ப்பாவையர்” செந்தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகளை ஒத்த மகளிர் என்பதும் தகும். பாவை: பதுமை. உவமை யாகு பெயராய் மகளிரை உணர்த்தி நின்றது. ஏடு: இதழ். சினையாகு பெயராய் இங்கு மலர் மாலையை உணர்த்தியது. உவந்தான்: விரும்பினான். நாடு: நாடி வரத்தகுந்தது என்பதால் இப்பெயர் பெற்றதென்பர். பீடம்: ஆசனம். துற்ற: நெருங்கிய.
அணிமாடத்திடை - மண்டபத்தை அண்மி - பொன் பீடத்து இருத்தி - கடன் யாவும் நேர்ந்து - விருந்தளிப்ப - இனிது உவந்தான் என முடிக்க.
தயரதச் சக்கரவர்த்தியை உரோமபத மன்னன் அரியணையில் இருக்கச் செய்து, பேரரசனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகள் யாவும் செய்து விருந்தளித்தான். தயரதன் அதற்குப் பெரிதும் உவந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming to a hall within a beautiful mansion where the light of fine gold flickers,
- while women with red lotus-flower feet in ankle-rings sang 'Many years!', on a seat of bright gold
- he seated the king of the sharp spear decked with petals, and performing every due rite,
- the king of the close-petalled flower garland gave him a feast, and he who gave back heaven was glad.
What the poem says
Urōmapataṉ honours Tacarataṉ as an emperor should: a golden hall, women singing the song of long life, a seat of gold, every courtesy, and a feast. Tacarataṉ is pleased.
The women's feet are likened to red lotuses; the commentary adds that the phrase can also mean women like Lakṣmī, who sits on the red lotus. 'He who gave the gods' land' again refers to Tacarataṉ's help to Intiraṉ.