கம்பராமாயணம் 2334 · அயோத்தியா 10.16

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேந்து அவை இருந்த நீர் , விமலன் உந்தியில்
பூத்தவன் முதலிய புவியுள் தோன்றினார் ,
மூத்தவர் இருக்கவே , முறைமையான் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டிக் காண்டிர் ஆல் .

பொருள் · Meaning in Tamil

“வேத்தவை இருந்த நீர் - அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்; விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் - திருமாலின் திருவுந்தித் தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர் - மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர் இருக்கவே - உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம் முறைமையால் காத்தவர் - உலகத்தை முறைப்படி (அரசு நடத்திக்) காத்தவர்கள்; உளர் எனின் - இருப்பார்கள் ஆயின்; காட்டி - அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர் - உம் கருத்தையும் ஒப்புக் காண்பீர்களாக.

காட்டிக் காண்டல் என்பது சான்றுரைத்து உறுதிசெய்தலாகும். ‘ஆல்’ அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who sit in the royal council: among those born on earth
  2. from him who blossomed from the navel of the Pure One onward,
  3. if there are any who, while an elder lived, rightfully
  4. protected the land, point them out and see.'

What the poem says

Paratan challenges the council to produce a precedent. In the whole line descended from Brahmā, who was born from the navel of the spotless Viṣṇu, has any younger son ever rightfully ruled while his elder brother was alive?

If they can name one, let them cite him as proof. 'Point them out and see' means to establish a claim by citing evidence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēttavai irunta nīr, vimalaṉ untiyil
pūttavaṉ mutaliṉar puviyuḷ tōṉṟiṉār,
mūttavar irukkavē, muṟaimaiyāl nilam
kāttavar uḷar eṉiṉ kāṭṭik kāṇṭirāl.