கம்பராமாயணம் 2336 · அயோத்தியா 10.18

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''அன்று எனின் , அவனொடும் அரிய கான் இடை
நின்று , இனிது இரும் தவம் நெறியின் ஆற்றுவென் ;
ஒன்று இனி உரைக்கில் என் உயிரை நீக்குவென் ''
என்றனன் ; என்றபோது , இருந்த பேர் அவை .

பொருள் · Meaning in Tamil

“அன்று எனின் - (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி சூட்டல்) இயலாது ஆயின்; அவனொடும் - அந்த இராமனோடும்; அரிய கானிடை - வாழ்தற்கரிய காட்டிடத்து; நின்று - வாழ்ந்து; இருந்தவம் - பெரிய தவத்தை; இனிது - இனிமையாக; நெறியின் - செய்தற்குரிய முறைப்படி; ஆற்றுவென் - செய்வேன்; இனி - இதற்குமேல்; ஒன்று உரைக்கின் - (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்று நடத்த வற்புறுத்தினால்); என் உயிரை நீக்குவென் - என் உயிரை அழித்துக் கொள்வேன்;” என்றனன் - என்று சொன்னான்; என்றபோது - என்று பரதன் சொல்லியபோது; இருந்த பேர் அவை - அங்கே அமர்ந்திருந்த அரசவையில் உள்ளார்......

அரசவையில் உள்ளார்... ‘வாழ்த்தினார்’ (2263) எனப் பின்வரும் கவியிற் சென்று முடியும். வாழ்த்தினார் என முடிதலின் அரசவை என்பதற்கு அரசவையில் உள்ளார் என உரைத்தாம். ஒன்று இராமனைக் கொணர்ந்து முடிசூட்டல், இரண்டு இராமனோடு காட்டில் தவம் செய்தல், மூன்று தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் என்றானாம் பரதன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If not that, then with him in the harsh forest
  2. I will stay and gladly perform great penance in the proper way;
  3. if you say one word more, I will give up my life,'
  4. he said; and when he said it, the great assembly seated there...

What the poem says

Paratan sets out three choices. They must bring Irāmaṉ back and crown him. If that fails, Paratan will go to the forest and live as an ascetic beside his brother. And if they press him once more to rule, he will take his own life.

The last line leaves the council's reaction hanging; the sentence ends two verses later, when the assembly blesses him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''aṉṟu eṉiṉ, avaṉoṭum ariya kāṉiṭai
niṉṟu, iṉitu irun tavam neṟiyiṉ āṟṟuveṉ;
oṉṟu iṉi uraikkiṉ eṉ uyirai nīkkuveṉ ''
eṉṟaṉaṉ; eṉṟapōtu, irunta pēr avai.