கம்பராமாயணம் 2341 · அயோத்தியா 10.23

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவி தலை உயிர் எலாம் , ''இராமன் பொன் முடி
கவிக்கும் '' என்று உரைக்கவே களித்தலால் , அது
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன் கொல் ஆம் .

பொருள் · Meaning in Tamil

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாம் - ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக; புவித்தலை உள உயிர் எலாம் - உலகத்திடத்து உள்ள உயிர்கள் எல்லாம்; “இராமன் பொன்முடி கவிக்கும்” - இராமன் பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று உரைக்கவே - என்று (முரசொலி மூலம் சத்துருக்கனன்) சொல்லவே; களித்தது - பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது - அந்தச் சொல்; செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொல் - செவி யென்னும் பொறி, கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனைசெய்தது தற்குறிப்பேற்ற வணியாகும். பொறிகளை அவித்தவர் என்பதற்குப் புலன்களை அவித்தவர் என்பது இலக்கணை. பொறிகளின்வழி புலனுகர்ச்சிக்கு மனத்தைச் செல்லவிடாது அடக்கியவர்கள் என்பது கருத்து. ‘உயிர் எலாம்...... களித்தது’ என்பது ஒருமை பன்மை மயக்கம்; தொகுதி ஒருமை என்றும் கொள்ளலாம். ஆல், ஆம் - அசைகள். கொல் - வினாப்பொருட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the living beings on earth, starting with those who have quenched the five senses,
  2. when it was announced, 'Irāmaṉ will put on
  3. the golden crown', rejoiced; were those words
  4. some divine honey for the sense of hearing to taste?

What the poem says

When the drums announce that Irāmaṉ will be crowned, every creature on earth rejoices, even the sages who have mastered their five senses and are moved by nothing.

The poet wonders whether the announcement was a kind of heavenly honey that the ear could taste. Attributing an imagined cause like this is a recognised figure in Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avitta aim pulattavar ātiyāy uḷa
puvittalai uyir elām, ''irāmaṉ poṉ muṭi
kavikkum '' eṉṟu uraikkavē kaḷittatāl, atu
cevip pulam nukarvatu ōr teyvat tēṉkolām.