கம்பராமாயணம் 2340 · அயோத்தியா 10.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல்லவன் உரை செய - நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி - சத்துருக்கனன்; கூறலும் - (இராமனை அழைத்து வரும் செய்தியைச்) சொல்லுதலும்; அல்லலின் - துன்பத்தால்; அழுங்கிய - இரங்கிக்கெட்ட; அன்பின் மாநகர் - இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை - உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்; அச்சொல் எனும் அமிழ்தினால் - அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்; துளிர்த்தது - (மீண்டும் உயிர் பெற்றுத்) துளிர்விட்டது; என்ன - என்று சொல்லும்படி; ஒல்லென - பேரொலி உண்டாகுமாறு; இரைத்தது - மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அழுங்கிய - இரங்கிக் கெட்ட. “அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்” (தொல். சொல், உரி. 52.) என்பது காண்க; இரண்டினுள் ஒன்று உரைக்கவும் பெறும். உயிரற்ற உடம்பு துளிர்த்தாற்போல என்றது பட்ட மரம் துளிர்விடம் பிழைத்தலாகும் ஆதலின் இங்கேயும் உயிர் வந்ததாக ஆகும் என்க. துளிர்த்தல் என்பதால் உருவக அணியும், ‘என்ன’ என்ற உவம உருபால் பின்னர் உவமையணியும் வந்துள்ளமை காண்க. இவ்வாறு வருவனவற்றைக் கலவையணி என்பர் அணிநூலார்.
“மொழியப்பட்ட அணிபல தம்முள் தழுவ உரைப்பது சங்கரணமே” (தண்டி). சஞ்சீரண அணி என்பது கலவையணியாம். ‘ஆல்’ அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the good one commanded and the prince proclaimed it,
- the great city, full of love and wasted with grief,
- raised a loud roar, as if lifeless bodies
- had sprouted again through the nectar of those words.
What the poem says
As Cattirukkaṉaṉ makes the proclamation at Paratan's command, the people of Ayōttī, who love Irāmaṉ and had been crushed by sorrow, break into a great roar of joy.
It is as though dead bodies had put out fresh shoots, revived by the nectar of that announcement. The commentary notes that the verse mixes metaphor ('sprouted') and simile ('as if'), a combination the rhetoricians call a blended figure.