கம்பராமாயணம் 2339 · அயோத்தியா 10.21

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
'

பொருள் · Meaning in Tamil

குரிசிலும் - பரதனும்; தம்பியைக் கூவி - (தன்) இளவலான சத்துருக்கனனை அழைத்து; கொண்டலின் - மேகம் போல; முரசு அறைந்து - இடியென ஒலிக்கும் முரசினை அடித்து; “இந் நகர் முறைமை வேந்தனை - இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய இராமனை; ஈண்டுத் தருதும்” - காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து வரப்போகிறோம்; என்பது சாற்றி - என்னும் செய்தியை அறிவித்து; தானையை - நம் சேனைகளை; “விரைவினில் எழுக” என - (இராமனை அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று; விளம்புவாய் - சொல்லுவாயாக,” என்றான் - என்று கட்டளை இட்டான்.

இராமனே அயோத்தியரசன் என்பதில் மாறாத கருத்துடையவன் பரதன் ஆதலால், அரசனை அழைக்கச் செல்லும் முறைப்படி சேனைகள் வரும்படி பணித்தான் என்க. தனிமனிதரை அழைத்தற்கும், அரசர்களை அழைத்தற்கும் வேறுபாடு உண்டு. இனி, தானொருவனே சென்று அழைத்தால் இராமன் வராதிருக்கவும் கூடும். தன் பிரிவினால் வருந்திக் கண்ணும், நீருமாய் இருக்கும் இவ்வளவுபேரையும் கண்டால் மனம் இரங்கி வருவான் என்று கருதி, சேனைகளையும், மக்களையும் உடன்வரப் பறையறைந்து தெரிவித்தான் என்பதும் ஒன்று; ஏற்பன அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The prince called his younger brother: 'Beating the drum like a cloud,
  2. proclaim, \u201cWe shall bring back here
  3. the rightful king of this city,\u201d and tell the army
  4. to rise and set out swiftly,' he said.

What the poem says

Paratan tells his brother Cattirukkaṉaṉ to have the drums beaten like thunder and to proclaim that they are going to bring back the rightful king of the city, and to order the army to march at once.

Because Paratan regards Irāmaṉ as the true king, he arranges a proper royal escort with troops, as befits the summoning of a sovereign. He may also hope that the sight of so many grieving people will move Irāmaṉ to return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuricilum tampiyaik kūvi 'koṇṭaliṉ
muracu aṟaintu, ''in nakar muṟaimai vēntaṉait
tarutum īṇṭu '' eṉpatu cāṟṟit tāṉaiyai,
viraiviṉil eḻuka! eṉa viḷampuvāy ' eṉṟāṉ.