கம்பராமாயணம் 2338 · அயோத்தியா 10.20

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆழியை உருட்டியும் , அறங்கள் போற்றியும் ,
வேள்வியை இயற்றியும் , வளர்க்க வேண்டும் ஓ ?
ஏழின் ஒடு ஏழ் எனும் உலகும் எஞ்சினும்
வாழிய நின் புகழ் ! ' என்று வாழ்த்தினார் .

பொருள் · Meaning in Tamil

ஆழியை உருட்டியும் - (அரசேற்று நடத்தி) ஆணைச்சக்கரத்தைச் செலுத்தியும்; அறங்கள் போற்றியும் - பல்வகையான அறச்செயல்களைப் பாதுகாத்தும்; வேள்வியை இயற்றியும் - (அரசர்க்குரிய பரிமேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க வேண்டுமோ? - (நின்புகழை இனி நீ) வளர்க்க வேண்டியதில்லை; நின்புகழ் - (இத்தகைய நற்குண நற்செயல்களால் இப்போது பெற்றுள்ள) நின்புகழே; ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் - பதினான்கு உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய - வாழ்வதாக;” என்று வாழ்த்தினார் -.

வாழ்த்தினார் ‘அரசவையோர்’ என (220].) முன்னைய பாடலின் இறுதிச் சொற் கொண்டு முடிக்க. செயற்கையால் பிறர்புகழ் தேடவேண்டும்; ஆனால், பரதனுக்கு இயற்கையாகிய குணம் செயல்களே பெரும்புகழுக்குக் காரணமாயின என்று பாராட்டுதல் அரசவையோர் கருத்தாகக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Must you increase it by turning the wheel of rule,
  2. by protecting the ways of dharma, by performing sacrifices?
  3. Even if the worlds that are called seven and seven should perish,
  4. long may your fame live!' so they blessed him.

What the poem says

The assembly blesses Paratan, completing the sentence begun two verses earlier. Other kings must earn renown by ruling, upholding dharma and performing great sacrifices such as the horse sacrifice.

Paratan needs none of that: his character and conduct have already won him a fame that will outlast even the fourteen worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āḻiyai uruṭṭiyum, aṟaṅkaḷ pōṟṟiyum,
vēḷviyai iyaṟṟiyum, vaḷarkka vēṇṭumō?
ēḻiṉōṭu ēḻ eṉum ulakam eñciṉum
vāḻiya niṉ pukaḻ! ' eṉṟu vāḻttiṉār.