கம்பராமாயணம் 235 · பால 5.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குனி சிலை வயவனும் - வளைந்த வில்லையுடைய வெற்றி மிகுந்த வேந்தனான உரோமபத மன்னனும்; கரங்கள் கூப்பிட - கைகளைக் குவித்து வணங்கி நிற்கவும்; துனி அறு முனிவரர் - குற்றம் நீங்கிய மனத்தினரான முனிவர்கள் பலரும்; தொடர்ந்து சூழ்வர - தொடர்ந்து பின்பற்றிவரவும்; வனிதையும் அருமறை வடிவு போன்று ஒளிர் முனிவனும் - தனது வாழ்க்கைத் துணைவியான சாந்தையுடன், அரிய வேதங்களே உருவெடுத்து வந்தது போன்ற அந்த முனிவனும்; பொறிமிசை - இயந்திரத் தேர் மீது அமர்ந்து; நெறியை முன்னினார் - அயோத்தியின் வழியே செல்ல எண்ணினார்.
குனி சிலை - வளைந்த வில். குனிதல்: வளைதல். குனி சிலை வினைத் தொகை. வயவன்: வெற்றியுடையவன். வயவனும்: “உம்” எதிரது தழீஇயது. கூப்பிட - குவிக்க (கூப்பு+இடு+அ) “இடு” என்பது துணை விகுதி. கூப்பு: வினை. துனி: உலக இயற்கையால் நேரும் துன்பமாம். அதனை வென்றவர்களாதலால் “துனி அறு” முனிவராயினர். பொறி: இயந்திரம் (“இயந்திர எகின மூர்ந்து” என்பது வில்லிபாரதம்). நினைந்த நெறியில் செல்ல வல்லது என்பதால் “தேர் ஏறி நெறியை முன்னினார்” என்று கூறப்பட்டது.
கரங்கள் கூப்பிட - சூழ்வர வனிதையும் முனியும் பொறிமிசை - நெறியை முன்னினார் என இயைக்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the mighty king of the bent bow stood with joined palms,
- and sages free of all fault followed around them,
- the woman, and the sage who shone like the rare Vedas in bodily form,
- set out on the road upon the chariot.
What the poem says
The sage and Cāntai set out for Ayōtti in the chariot, a machine that goes wherever its rider wills, while Urōmapataṉ stands with hands joined in reverence and other sages follow.
The sages are 'free of distress' because they have risen above the troubles that worldly life brings.