கம்பராமாயணம் 236 · பால 5.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறமும் தேவரும் - அறக்கடவுளும் தேவர்களும்; வெந்து எழு கொடு வினை வீட்டும் - வெந்து எழுந்து நம்மை வருத்தும் கொடிய துன்பங்களை அழிக்கும்; மெய்ம் முதல் வந்து எழ - மெய் முதற் பொருளாகிய பரமன் இங்கு வந்து தோன்ற; அருள் தருவான் என்று எண்ணி - இம் முனிவன் அருள் புரிவான் என நினைத்து; அந்தர துந்துபி முழக்கி - தேவ வாத்தியங்களை முழக்கிக் கொண்டு; ஆய்மலர் சிந்தினர் - ஆய்ந்தெடுத்த நறுமண மலர்களைத் தூவினராக; களித்தனர் - மகிழ்ச்சி மிகக் கொண்டனர்.
அந்தரம்: விண்ணுலகம். துந்துபி: தேவ வாத்தியம். முழக்கி: வினையெச்சம். ஆய்மலர்: வினைத் தொகை. சிந்துதல்: சொரிதல். களித்தல்: களி கொண்டாடுதல். அறம்: அறக்கடவுளைக் குறித்து நின்றது. வெந்தெழுதல்: வெப்பம் கொண்டு ஓங்குதல். கொடுவினை: பண்புத் தொகை. கொடுவினைகளை அழிக்கும் மெய்ம் முதல் என்பது பொருள். மெய்: உண்மை. முதல்: காரணம். உலகுக்கு முதற் காரணமான மெய்ப் பொருளாகிய பரமனைக் குறித்தது. இங்கு ராமபிரானாக அவதரிக்க இருக்கும் திருமாலை 'மெய்ம்முதல்' என்றார்.
வந்தெழ: வந்து அவதரிக்க. அறமும் தேவரும் மெய்ம்முதல் வந்தெழ - அருள் தருவான் என்றெண்ணி - முழக்கி - சிந்தி - களித்தனர் என்பது கருத்து. முனிவன் தேரேறி வருதல் கண்டு அறமும் தேவரும் மகிழ்ந்தனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They beat the drums of heaven, scattered choice flowers,
- and rejoiced, both Dharma and the gods,
- thinking: 'He will grant that the true First Cause, who destroys
- the cruel karma that flares up and burns, should come and be born.'
What the poem says
Dharma personified and the gods celebrate as the sage sets out, sounding heavenly drums and showering flowers. They know that his sacrifice will bring about the birth of the Supreme Being, Tirumāl, as Irāmaṉ.
'The true First Cause' is the Supreme, the original cause of the world, who alone can destroy evil karma.