கம்பராமாயணம் 237 · பால 5.69

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ்வழி தூதுவர் - (பிறர் வருகையைத் தெரிந்து சொல்ல) அந்த வழியில் (நிறுத்தி வைக்கப்பட்டிருந்த) தூதுவர்கள்; அயோத்தி துன்னினார் - அயோத்தி நகரை அடைந்தனராக; மாதிரம் பொருத தோள் மன்னர் மன்னன் முன் - எல்லாத்திசைகளிலுமுள்ள வேந்தர்களை வென்ற தோள்களையுடைய வேந்தர்கள் வேந்தனான தயரதனுக்கு முன் நின்று; முனிவரவு ஓதினர் - கலைக்கோட்டு முனிவனது வருகையைத் தெரிவித்தனர்; ஓத வேந்தனும் காதல் என்ற அளவறு கடலுள் ஆழ்ந்தனன் - அவ்வாறு கூற, தயரத வேந்தனும் “அன்பு” என்னும் அளக்க இயலாத கடலுக்குள் மூழ்கியவனானான்; அவ்வழி - அப்போது என்றும் கூறலாம்; துன்னி - நெருங்கி; மாதிரம் - திசை (இடவாகு பெயராகத் திக்கில் வாழ்பவரை உணர்த்தும்); முன் - திருமுன் என்பது பொருள்.

தூதுவர்: துன்னினர்: ஓதினர்; ஓத: கடலுள் ஆழ்ந்தனன் என்பது பொருள் முடிவு.

முனிவன் தான் எதிர் நோக்கியவாறு வருவதனை அறிந்து அன்பு நிறைந்த மனத்தினனானான் என்பதை, காதல் என்ற அளவறு கடலுள் ஆழ்ந்தனன் என்று கூறியதன் நயம் மகிழ்தற்குரியது.

ஆறு கடலுள் ஆழ்ந்து. ஆம் தயரதன் என்ற பேராறு: “காதல்” என்ற “அளப்பருங் கடலில் ஆழ்ந்தது” என்கிறார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Messengers posted on that road reached Ayōtti,
  2. and before the king of kings, whose arms had conquered every quarter,
  3. they told of the sage's coming; as they told it, the king
  4. sank into the boundless ocean called love.

What the poem says

Runners stationed along the route bring the news to Tacarataṉ. He, who had been waiting anxiously for the sage, is overwhelmed with joy.

The commentary enjoys the image: Tacarataṉ, himself like a great river, plunges into the measureless sea of love. 'Arms that fought the quarters' means arms that defeated the kings of every direction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūtuvar, av vaḻi ayōtti tuṉṉiṉār,
mātiram poruta tōḷ maṉṉarmaṉṉaṉmuṉ
ōtiṉar muṉi varavu: ōta, vēntaṉum,
kātal eṉṟu aḷavu aṟu kaṭaluḷ āḻntaṉaṉ.