கம்பராமாயணம் 238 · பால 5.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொருக்கென எழுந்தனன் இரதம் ஏறினன் - தயரதன் விரைவில் எழுந்து தேரில் ஏறிக் கொண்டான்; மலர் மழை பொழிந்தன - மலர்கள் மழை போலத் தூவப் பெற்றன; ஆசி பூத்தன - ஆசி மொழிகள் எழுந்தன; பல் இயம் மொழிந்தன - பல இன்னிசைக் கருவிகள் இசைத்தன; முரசம் ஆர்த்தன - முரசங்கள் முழங்கின; தீவினை வேரினோடுமே விழுந்தன - தீவினைகள் வேரொடு அற்று வீழ்ந்தனவாயின.
மன்னன், முனிவனின் வருகையை எதிர்நோக்கியிருந்தவன் ஆதலால் வரவேற்க விரைந்தெழுந்தான். தேரேறிச் சென்று முனிவனை வரவேற்க முந்தினான் என்பது தோன்ற “பொருக்கென” என்றார். மலர்மாரி பொழிந்தன. “ஆசி பூத்தன” என்றார். “பூத்தல்” உண்டாதலும், பரந்து செல்லுதலுமாம். “மொழிந்தன” என்றதால் பலவகை வாத்தியங்கள் முழங்க, அரசனது புகழை மொழிந்தனர் என்பதும் பொருளாம். மொழிந்தன, பூத்தன, ஆர்த்தன என்று படர்க்கை வினை கொண்டு முடிந்தது. வியப்பையும் குறிக்கும். மலர்மழை பொழிதல் முதலிய மங்கலச் செயல்களால் தீவினை வீழ்ந்தது என்கிறார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- He rose in a flash and mounted his chariot;
- flowers poured down like rain; blessings blossomed;
- many instruments spoke; drums thundered;
- evil karma fell away, roots and all.
What the poem says
Tacarataṉ springs up and drives out to meet the sage. The verse piles up short clauses to convey the excitement: showers of flowers, blessings everywhere, music, drums.
'The instruments spoke' may also mean that people sang the king's praise to their music. The auspicious signs show that evil has been uprooted at last.