கம்பராமாயணம் 239 · பால 5.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அதிர்ந்தெழு முரசுடை அரசர்கோ மகன் - ஒலித்து ஓங்கும் முரசத்தை உடைய மன்னர் மன்னனாகிய தயரதன்; எம் மனத்துயர்ப் பிறங்கல் பிதிர்ந்தது என்று கொண்டு - எமது மனத் துயராகிய மலை தூளாயிற்று என மனத்தில் கொண்டு; ஓசனை இரண்டொடு ஒன்றின் - இரண்டுடன் ஒன்றாகிய மூன்று யோசனை (சென்று); முதிர்ந்த மாதவம் உடை முனியை - முதிர்ச்சியுற்ற பெருந்தவமுடைய முனிவனை; கண்களால் எதிர்ந்தனன் - தனது கண்களால் தரிசித்தான்.
தனக்கு மக்கட் பேறில்லை என்பதைப் பெருந்துயராக, மலையை ஒத்த துன்பமாகக் கருதியிருந்தான் என்பதால் “மனத்துயர்ப் பிறங்கல்” என்றான். அத்துயரம் அடியோடு தீர்ந்தது என்பதால் “பிறங்கல் பிதிர்ந்தது” என்றான். “எம்” என்றதால் தேவியரையும் நாட்டு மக்களையும் உட்படுத்திக் கூறினான் என்பது கருத்து. பிறங்குதல்: வளர்தல். பிதிர்தல்: சிதறுண்டு போதல். ஓங்கி வளர்ந்து நின்ற துன்பம் அடியோடு சிதறுண்டு போயிற்று என்பது குறிப்பு. “கண்களால் எதிர்ந்தனன்” என்று கண்பெற்ற பயன்பெற்றான் என்பதைக் குறிப்பிடவே ஆம். துயர்ப் பிறங்கல்: உருவகம். எழுமுரசு: வினைத்தொகை
ஆங்கிலம் · English translationAI
Translation
- Saying 'The mountain of grief in our hearts is shattered,'
- the son of kings, with his drums that thunder and rise,
- beheld with his own eyes the sage of ripe and great austerity,
- when he had gone three yōjanas, two and one.
What the poem says
Tacarataṉ drives three yōjanas out of Ayōtti and at last sees the sage. His childlessness had weighed on him like a mountain; now it breaks into dust.
He says 'our' grief because his queens and his people shared it. 'Beheld with his eyes' suggests that his eyes had at last found what they were for.