கம்பராமாயணம் 2361 · அயோத்தியா 10.43

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவண் எழுந்த சேனை - அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் - பூமி, ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர் கடல் - உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது என் - ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல் தன் - (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும், எண்ணினும் நெடிது - (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும், (நினைக்கும்) மனத்தையும், (நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து நீண்டதாகும்.

'உண்ணிய' 'செய்யிய' என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; 'நிமிர்' என்னும் வினைகொண்டு முடிந்தது. 'ஏ'காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Why say it was like the ocean rising up to swallow
  2. the earth, the sky and the shining quarters?
  3. Longer than the eye, the mind and even the reckoning
  4. of the lord of the lotus was the army that rose there!

What the poem says

The poet describes the size of the army leaving Ayōttī. Comparing it to the ocean that rises at the end of an age to swallow earth, sky and every direction would not be enough.

It stretched beyond what even Piramaṉ, the creator seated on the lotus, could see with his eyes, hold in his mind or count in his thoughts, though he made all things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇaiyum, vāṉaiyum, vayaṅku tikkaiyum,
uṇṇiya nimir kaṭal okkum eṉpatu eṉ?
kaṇṇiṉum maṉattiṉum kamalattu aṇṇaltaṉ
eṇṇiṉum neṭitu avaṇ eḻunta cēṉaiyē!