கம்பராமாயணம் 2360 · அயோத்தியா 10.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் அளவு இல் சேனை - அந்த அளவற்ற சேனையானது; கோமகன் பிரிதலின் - அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு சென்றபடியால்; கோலம் நீத்துள - தன் அலங்காரத்தைத் துறந்துள்ள; தாமரைச் செல்வியும் - இலக்குமியும்; தவத்தை மேவினாள் - (தானும்) தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்; காமனும் - மன்மதனும்; அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் - (இன்பம் நுகர்வார் எவரும் இன்மையின் தன் தொழில் இறந்தது என்று) அரிய துன்பக் கடலில் மூழ்கிவிட்டானாகும்; என நிகழ்ந்தது - என்று சொல்லுமாறு பொலிவும் மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது. தொழில் செய்தல் மகிழ்ச்சியாம்; தொழில் செய்யாமல் சும்மா இருத்தல் துன்பமாம்; மன்மதன் தனக்கு வேலையின்மை கருதித் துயர்க்கடலில் மூழ்கினான் ஆம். “ஏ” காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because the prince has gone away, the lady of the lotus,
- having cast off her adornment, has taken up penance;
- and Kāmaṉ too has sunk in a sea of bitter grief' —
- so it seemed, as that measureless army moved on.
What the poem says
The army marches without splendour or joy. The poet says it looked as if Lakṣmī, goddess of fortune who dwells in the lotus, had stripped off her finery and gone off to do penance because Irāmaṉ had left the land.
Kāmaṉ, the god of love, has also drowned in sorrow: with no one in the mood for pleasure, he has no work to do, and for him idleness is misery.