கம்பராமாயணம் 2359 · அயோத்தியா 10.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒல்கிய - (மகளிரது) வளையும் தன்மை உள்ளனவாகிய இடைகள்; புல்கிய - (எப்பொழுதும் தம்மைத் தழுவிக் கிடக்கும்; மணிவடம் - மணிகள் பதிக்கப்பெற்ற வடங்களை; பூண்கிலாமையால் - (இப்பொழுது) அணியாமையால்; ஒருவகைப் பொறை உயிர்த்த - ஒருபடியாகப் பாரம் நீங்கி இளைப்பாறின; (எனவே) கேகயன் மடந்தை மல்கிய வாசகம் - கைகேயியின் வளமான வரம்; நல்கியது - அருள் செய்தது; அரிவையர் நடுவிற்கே கொல் - மகளிரது இடைக்கு மட்டும் போலும்.
கைகேயி கேட்ட வரத்தால் நலம் பெற்றது பெண்கள் இடை ஒன்றுதான்; இத்துணைக் காலம் பல மணிவடச் சுமைகளைத் தாங்கியிருந்த இடை இப்போது சுமைநீங்கி ஆறுதல் பெற்றன என்றார்.
இடையில் அணியும் மணிவடங்கள். விரிசிகை, கலாபம், பருமம், மேகலை, காஞ்சி என ஐந்து வகையாக 32, 21, 14, 8, 2 காசுகள் கோக்கப்பெற்று இருக்கும் என்ற செய்திகளை
“எண்ணிரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத் தொன்றில் பண்ணிய கலாபம் ஈரேழ் பருமநா லிரண்டிற் செய்த வண்ணமே கலை யிரண்டிற் காஞ்சி இவ் வகை ஓர் ஐந்தும் புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்பப் பூத்த போற் புலம்பப் பூட்டி”
என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளால் (திருவிளை. மதுரைக். திருமணப். 158) அறியலாம். “ஏ” காரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rich word spoken by the Kēkaya king's daughter
- has brought its kindness, it seems, only to the waists of women!
- For since they no longer wear the jewelled girdles that clung to them,
- the slender, swaying waists have in a way breathed free of their load.
What the poem says
As Paratan's great army sets out from Ayōttī to bring Irāmaṉ back from the forest, the poet looks at the women marching with it. In mourning they have put away their ornaments, including the heavy jewelled girdles worn about the waist.
With bitter wit he says that the boon Kaikēyi extracted has done good to one thing only: women's slender waists, which have at last been relieved of the weight of those many-stranded girdles. Tamil tradition named five kinds of such girdles, each strung with a fixed number of gold pieces.